தருமபுரி லாரியில்கடத்தப்பட்டரூ.10.லட்சம் மதிப்பிலான அரசால்தடைசெய்யபட்ட குட்காபறிமுதல் காவல்துறையினர் அதிரடி.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் காவல் ஆய்வாளர் திரு. வெங்கடராமன் உதவி ஆய்வாளர் திரு. ஜவகர் மற்றும் போலீசார் தலைமையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது டிஷ்யூ பேப்பர் மூட்டையுடன் சேர்த்து மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ.10.25 லட்சம் மதிப்பிலான  சுமார் 1500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.

நிருபர்.முகமதுயூனுஸ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.