திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் ட்ரைலர்லாரியை திருடிய திருடன் கைது தனிபடை காவல்குழுவினர் அதிரடி


 .திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்தவர் அருமைநாயகம் இவரது மகன் கிருபை நாயகம் (25). இவரது ஜிப்புடன் கூடிய ட்ரெய்லர் லாரியை தனிஸ்லாஸ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்தமாதம் 19ஆம் தேதி துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனி அருகே லாரியை நிறுத்திவிட்டு 21ஆம் தேதி  ட்ரெய்லர் லாரியை எடுக்க சென்று பார்த்த பொழுது லாரியை காணவில்லை. இது சம்பந்தமாக கிருபை நாயகம் துவாக்குடி காவல் நிலையத்தில்  புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சிமாவட்ட SP. சுஜித்குமார்IPS அவர்கள் உத்தரவின் பேரில் திருவரம்பூர்சரக DSP திரு.அறிவழகன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கிருபை நாயகத்தின் உறவினரான நவல்பட்டு அண்ணா நகர்பகுதி இரண்டை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜோஸ்வா (32), 19ஆம் தேதி துவாக்குடி பகுதியில் நடமாடியது தெரியவந்தது. மேலும் ஜோஸ்வாவின் செல்போன் எண்ணின் டவர் லொகேஷன் பார்த்தபோது துவாக்குடி பகுதியில் காட்டியது. அதன் அடிப்படையில் ஜோஸ்வாவை தனிப்படை போலீசார் சந்தேக வளையத்திற்குள்  கொண்டு வந்ததோடு அவரது செல்போனை தொடர்ந்து கண்காணித்த பொழுது ஜோஸ்வா சென்னையில் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஜோஸ்வாவை உடனடியாக தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் கிருபை நாயகம் டிரைலர் லாரியை திருடியதை ஒத்துக் கொண்டான். மேலும் அவனிடம் விசாரணை நடத்தியபோது 19-11-22 ஆம் தேதி இரவே சம்பவ இடத்தில் இருந்து 12  மணியளவில் லாரியை நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி பால் பண்ணை எடுத்துச் சென்றதாகவும் பின்னர் அங்கு இருந்து லாரியின் நம்பர் பிளேட்டை மாற்றி கன்னியாகுமரிக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளான். ஜோஸ்வா கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனது நண்பனான திருத்துறைப்பூண்டி நெடுங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சர்க்கரை மகன்  ராஜா (41) என்பவனையும் கைது செய்தனர்.

திருட்டு போன ஜிப்புடன் கூடிய டிரைலரை துவாக்குடி (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் திருமதி.கமலவேணி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சதிஸ்குமார், இன்பமணி, துவாக்குடி காவல்நிலைய போலீசார் அருண்மொழிவர்மன், ராஜேஸ். ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.விரைவில் ட்ரைலர்லாரியை கண்டுபிடித்த் DSP.அறிவழகன் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினரை SP.சுஜித்குமார் IPS பாராட்டினார்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.