Posts

Showing posts from September, 2022

காவல்ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை கைது செய்த பயிற்சி உதவி ஆய்வாளருக்கு வெகுமதி மற்றும் பரிசு வழங்கி SP.பாராட்டு.

Image
தமிழக காவல்துறை பயிற்சி  அகாடமியில் பயிற்சி முடித்த  உதவி ஆய்வாளர்களுக்கு  மாவட்ட காவல் நிலையங்களில் ஆறு மாதம் அடிப்படை பயிற்சி பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 16 பயிற்சி உதவி  ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு காவல் நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.   மேற்படி திசையன்விளை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு.ஆதிராஜன், அவர்கள்,  கடந்த 28.09.2022 அன்று திசையன்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களை கைது செய்தார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.P.சரவணன், IPS அவர்கள், பயிற்சியின் போது சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் *திரு.ஆதிராஜன், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்தார். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

குற்றசம்பவங்களை தடுக்க கண்டறிய அரசு அறிவித்தபடி திருச்சிமாநகரபோக்குவரத்து காவல்துறையினருக்கு 12 BWC கேமராக்களை வழங்கி அறிவுரை கூறிய காவல்ஆணையர்.G.கார்த்திகேயன் IPS

Image
 திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்IPS, அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும்  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு 12 Body Worn Cameras வழங்கப்பட்டது. (பணியின் போது சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வது).  மேற்கண்ட 12 BWC கேமராக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தில் உள்ள 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா 2 வீதம் 12 Body Worn Cameras போக்குவரத்து காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியும், மேம்படுத்தி சீர்செய்யவும், மேலும் வாகன தணிக்கையின்போது ஏற்படும் இடர்பாடுகளை மேற்கண்ட

ரூ. 7½ லட்சம் மதிப்புள்ள நிலங்களை உரியவர்களுக்கு மீட்டுக்கொடுத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.SP.பாராட்டு.

Image
திருநெல்வேலிமாவட்டம் பாளையங்கோட்டை, குலவணிகர்புரத்தைச் சேர்ந்த நம்பி(73) என்பவருக்கு சொந்தமான ரூ. 2½ லட்சம் மதிப்புள்ள 41 செண்ட் இடம் நாங்குநேரி, இளங்குளம் பகுதியில் உள்ளது. அதேபோல் தென்கலம் புதூரைச் சேர்ந்த நிலமேனிச்செல்வன்(53) என்பவருக்கு சொந்தமான ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 87 செண்ட் இடம் தென்கலம் பகுதியில் உள்ளது.  மேற்கண்ட நபர்களின் இடங்களை போலி ஆவணம் மூலம்‌ வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் நம்பி, நிலமேனிச்செல்வன் ஆகிய இருவரும் நிலங்களை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS, அவர்களிடம் மனு அளித்தார்.  மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மீராள்பானு அவர்கள், உதவி ஆய்வாளர்கள் திருமதி. சோபியா, திரு. முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு,  நம்பி என்பவருக்கு சொந்தமான 41 செண்ட் நிலத்தையும், நிலமேனிச்செல்வன் என்பவருக்கு சொந்தமான 8

போலீஸ் பார்வை குழுமம் இந்திய பேனா நண்பர் பேரவை மகாத்மா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

Image
 போலீஸ் பார்வை மாத இதழ் குழுமமும், இந்திய பேனா நண்பர் பேரவை குழுமமும் இணைந்து நடத்திய, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும், மகாத்மா கண் மருத்துவமனை வழங்கிய இலவச கண் சிகிச்சை முகாம் .குண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மிக  விமர்சியாக நடைபெற்றது முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் குண்டூர் பர்மா காலனி T. லட்சுமி திருமுருகன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். போலீஸ் பார்வை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர் என் பாலகிருஷ்ணன் இந்திய பேனா நண்பர் பேரவை தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு உழவர் தியாகசாந்தன் அவர்கள் முன்னிலை வகித்து கண்சிகிச்சை முகாமுக்கான ஏற்பாடுகளை செய்தனர் முகாமில் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் அதில் 22. நபர்கள் அறுவை சிகிச்சை மற்றும் லென்ஸ் பிட்டிங் காக தேர்வு செய்யப்பட்டனர் சிகிச்சைக்கு தேர்வானவர்களை மகாத்மா கண் மருத்துவமனை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை லென்ஸ் பிட்டிங் மற்றும் முழு கண் சிகிச்சை முடிந்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு மகாத்மா கண் மருத்துவமனை வாகனத்தில் கொண்டு வந்து விட்டுவிட

ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்ததென்காசி காவல்துறையினர்.SP.பாராட்டு.

Image
தென்காசி மாவட்டம், இராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி மற்றும் சந்திரன் ஆகிய ஆறு நபர்களுக்கு பாத்தியப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை,கடைக்குட்டி தம்பியான சந்திரன் என்பவர் மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்ததாக சரோஜினி கடந்த 06/09/2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சாந்திச்செல்வி அவர்கள் துரிதமாக விசாரணை மேற்க்கொண்டு மேற்படி நிலத்தை அபகரித்த சந்திரன் என்பவரிடம்  ஆவணம் ரத்து செய்யப்பட்டது. பின்பு மீட்கப்பட்ட நிலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் முன்னிலையில் தங்கராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலத்தைப் பெற்றுக் கொண்ட தங்கராசு மற்றும் அவர்களது சகோதர, சகோதரிகள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார். நிருபர்.அண்ணாமலை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் தினமும் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS தெரிவத்து வேளான் அங்காடியைதிறந்து வைத்தார்

Image
  .தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் அங்கமான வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலமாக நாஞ்சிக்கோட்டை சாலையில் இயங்கி வரும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய தின்பண்டங்கள் அங்காடியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்IAS  திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியது: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் மற்றும் திருக்காட்டுபள்ளி ஆகிய ஐந்து வட்டாரங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் சேர்த்து நாளொன்றிற்கு சராசரியாக ரூ.21 லட்சம் மதிப்பு உள்ள 55 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 175 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தினசரி 8,000 முதல் 9,000 நுகர்வோர்கள் பயனடைகின்றனர். தஞ்சாவூர் உழவர் சந்தையில் உள்ள 71 கடைகளின் மூலம் நாளொன்றிற்கு சராசரியாக ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள 15 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 65 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது

தகுந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.

Image
வேலூர் தெற்கு காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் இளவரசி 17.9.2022 அன்று அதிகாலை 2 மணிக்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்த பொழுது  காவல் நிலையத்தின் எதிரே சாலை ஓரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தார்.  உடனே  காவல் நிலையத்திற்கு ஓடி வந்த இளவரசி, அங்கிருந்த உதவி ஆய்வாளர் பத்மநாபன், பெண் காவலர் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்றார். அவர்கள்  108 ஆம்புலன்சை அழைப்பதற்குள் அந்தப் பெண்ணிற்கு பிரசவ வலி அதிகமானதால் பெண் காவலர்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.   இதையடுத்து  தாயையும், குழந்தையையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் பெண்ட்லாண்ட் அரசு  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.   அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.  ஆதரவற்ற அந்தப் பெண்ணிற்கும் குழந்தைக்கும் காவலர்கள் தேவையான உடைகள் மற்றும் இதரப் பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் வாங்கிக் கொடுத்தனர்.  இச்சம்பவம் பற்றி அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C.. சைலேந்திரபாபு IPS அவர்கள்  உதவி ஆய்வாளர் திரு.பத்மநா

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ப்புநிகழ்ச்சி.

Image
சமூக நீதி நாள் உறுதிமொழி 17.09.2022  திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்களின் தலைமையில்  மாவட்ட குற்ற ஆவணக்காப்பக பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பெரியசாமி அவர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெபராஜ் அவர்கள் (SJHR)  மற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்!  சுயமரியாதை ஆளுமை திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!  சமத்துவம்,  சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!  மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்! சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைந்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்!” என்று உறுதிமொழி ஏற்றனர். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவு செய்வது கட்டாயம் - திருச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

Image
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சார்ந்த முத்துக்குமரன் என்பவர், குவைத் நாட்டில் பணிபுரியும் இடத்தில் இறந்தார். அவரது உடல் தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு, விமானத்தின் வாயிலாக, திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு  வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்IAS ஆகியோர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... வேலை நிமித்தமாக முத்துக்குமரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. அங்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த துறையை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும். கடந்த ஆண்டில் 152 பேரும், இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர். அதே போல் வெளிநா

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை இயக்குனர். DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS. கூறினார்

Image
 தமிழக காவல்துறை இயக்குனர்.DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS அவர்கள் 15-09-22, தஞ்சை வந்தார். தஞ்சை மாவட்ட காவல்கண்காளிப்பாளர் அலுவலகத்தில் காவல்அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு காவல் நிலையம் அருகே சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் அருகே பாக்குவரத்து விதிமுறைகள் குறித்த சிறுவர்களுக்கான நவீன பூங்கா அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பின்னர் DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5.5 கோடி மதிப்பில், 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான நவீன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் குற்றங்களை குறைக்க முடியும். வாகனத்தின் மீது மோதி விட்டு தப்பியோடியவர்களின் வாகன எணணை தெளிவாக கண்டறியலாம்.தஞ்சையில் உள்ள தனியார் உணவகத்தில் 5½ கிலோ நகை கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நகைகளை மீ

கோவை மாவட்டம் காவல்துறையில் சிறப்பாகபணியாற்றிய காவல்அதிகாரிகளுக்கு SP.பத்ரிநாராயணன் IPS பாராட்டு

Image
கோவை மாவட்டம் காவல்துறையில் சிறப்பாகபணியாற்றிய காவல்அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில்(Crime Meeting) சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS.அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம்  (14.09.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பது மற்றும் குற்றச் செயல்கள் நடவாமல் தடுப்பது பற்றியும் மற்றும் கோவை மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக மாற்றுவது குறித்தும்,  மாவட்டத்தில் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் இருப்பு நிலை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை புலன் விசாரணை செய்து விரைந்து எதிரிகளை கைது செய்வது  பற்றியும்  அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சிறப்பு தனிப்பிரிவு காவல்துறையினருடன் கலந்தாலோசித்தார். இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த (ஆகஸ்ட்) மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆதாய கொலை, திருட்

நாட்டிலேயே முதன்முறையாக போக்சோ வழக்கின் நிலையை பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென்மண்டல IG.அஸ்ராகார்க் IPSஅறித்துள்ளார்.

Image
 நாட்டிலேயே முதன்முறையாக போக்சோ வழக்கின் நிலையை பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் அறிமுகம் செய்யப்படும் எனகாவல்துறை தென் மண்டல IG. அஸ்ரா கார்க்  தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுகின்றன. இதனால் தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறைவு. ஆனாலும் குற்றங்களே நடக்காமல் இருக்க தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் தென் மாவட்டங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை களைய தென் மண்டல IG அஸ்ரா கார்க்IPS அதிரடி நடவடிக்களை எடுத்து வருகிறார். இது குறித்து தென் மண்டல காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, IGயின் உத்தரவை அடுத்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உர

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை காவல்துறையினர் அதிரடி.

Image
கரூர் மாவட்டம்  கரூர் நகர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கமேடு NSK பகுதியை சேர்ந்த கந்தன் (எ) கந்தசாமியும்  அவரது நண்பர் ரூபன்ராஜ் என்பவரும் பெரிய ஆண்டன் கோவில் பெரியார் வளைவு மேம்பாலம் அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக  கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் சோதனையில் ஈடுபடும்போது,  சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை  செய்து கொண்டிருந்த அவர்களது கூட்டாளி சென்றாயன், கஸ்தூரி, கவாஸ்வர் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 44 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்கள் மற்றும் TN 60 Q 2391 TATA UltraTruck என்ற வாகனங்களையும், மேலும் ஆறு நபர்களையும் சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.V.கீதாஞ்சலி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள்  கைது செய்யப்பட்டனர்.  மேற்படி நபர்களிடமிருந்து  சுமார்  44 கிலோ கஞ்சா, மற்றும்  இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசார்  பறிமுதல் செய்து, மேற்படி ந

கோவை மாவட்டம்துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர் கைது.

Image
  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில் அரசால்தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர்கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன் அடிப்படையில்  துடியலூர் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் திரு. ராஜா அவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி, TVS நகர் பகுதிக்கு  காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த  சீரா நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சம்பா மூர்த்தி என்பவரது மகன் விஷ்ணுகுமார் (48) என்பவரை  கைது செய்து அவரிடமிருந்து  சுமார் 100 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள்

விழுப்புரம் மாவட்டம்சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில்நடைபெற்றது.

Image
  சென்னை ஐஐடி தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 1,2,3 ஆகிய ஓங்கூர் முதல் மடபட்டு வரை உள்ள வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சில வழிகாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட்டது.அதில் விபத்துக்கள் ஏற்பட மூன்று முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.  1.அதிவேக பயணம் 2.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் 3.சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பேசப்பட்டது. சாலை பாதுகாப்பு பணிகள் குறித்தும் மேம்பாலங்கள் வரும் வழித்தடங்களில் நீண்ட வழிதடமாக இருந்து பின்பு மேம்பாலங்களில் அருகில் வரும்போது குறுகிய வழித்தடங்களாக இருப்பதாலும் இதை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பாதகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் ஆக்சிடென்ட் ஜோன் என்ற பிரதிபலிப்பான் கொண்டு அறிவுறுத்தும் பொருட்டு பதாதைகள் வைக்கவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நடைமுறை

திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் செல்போன் பறித்த நபர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மீட்பு.காவல்குழுவினருக்கு காவல்ஆணையர் G.கார்த்திகேயன் IPS.பாராட்டு

Image
திருச்சி மாநகரில் கடந்த 20.08.22-ந்தேதி, இரவு 11.30மணிக்கு திருவானைக்கோவில் நாகநாதர் டீ கடை முன்பு ஏழாம்சுவை உணவகத்தில் பணிபுரியும் ஆனந்த்  என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், ஆனந்த் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்று, மேற்படி செல்போன் பறிப்பு சம்பவ நடைபெற்ற சில நிமிடங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன் IPS  அவர்கள் உடனடியாக வான்செய்தி ((Walkie Talkie) வழியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க இரவு பணியிலிருந்த காவல் அதிகாரிகள், ரோந்து பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ரோந்து வாகனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவையடுத்து திருச்சி மாநகரத்தில் இரவு பணியில் இருந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை செய்தும், மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மூன்று நபர்களும். மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை ப

கோவை மாவட்டம்பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வுஏற்ப்படுத்த*ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் தொடர்ச்சியாக "காவல்துறையினருடன் ஒரு நாள்" நிகழ்ச்சி.

Image
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அனைத்து பள்ளி குழந்தைகளையும்  விழிப்புணர்வின் மூலம் வலுவூட்டப்பட்டு அவர்களை விழித்திடும் குழந்தைகளாக  வடிவமைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக  (07.09.2022) மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் "காவல்துறையினருடன் ஒரு நாள்"(A DAY WITH POLICE) என்ற நிகழ்ச்சி  நடைபெற்றது.  இதில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் IG. திரு.சுதாகர்,IPS அவர்கள் தலைமையில் கோவில்பாளையம் *அரசு பள்ளியில் பயிலும் 30 மாணவிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் *திரு. முத்துசாமி, IPS * அவர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பத்ரிநாராயணன்,IPS * அவர்கள் மற்றும் காவல்துறையினரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டனர்.  அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள அ

தஞ்சை மகளிர் சுய உதவிக்குழு கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் வளாகத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS திறந்து வைத்தார்

Image
தஞ்சை மகளிர் சுய உதவிக்குழு கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் வளாகத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS திறந்து வைத்தார் .  தஞ்சை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் பூமாலை வணிக வளாகத்திலும், கல்லணையிலும் விற்பனை அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன் மூலம் 125 குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர். கலெக்டர் திறந்தார் இந்த நிலையில் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுயஉதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சை தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள், கால் மிதியடி, பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன

உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்து மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்த வடகாடு காவல்நிலைய காவலர்...

Image
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீழாத்தூரைச் சேர்ந்த பாக்கியம் 80  வயது ஆதரவற்ற மூதாட்டியான இவர் , கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர் நாடியம்மன் கோயில் மற்றும்  சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தங்கி இருந்தார்.    இந்நிலையில், வடகாடு காவல் நிலையத்தில் இருந்து இரவு நேர ரோந்து சென்ற காவலர் திரு. யாசர் அராபத் அவசர உதவி தேவைப்பட்டால் தன் னுடைய செல்போனுக்கு அழைக்குமாறு அந்த மூதாட்டியிடம் செல் போன் எண்ணை எழுதிக்கொடுத்து விட்டு சென்றுள்ளார் .  அதன்படி உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அந்த வழியே வந்த ஒருவரின் செல்போன் மூலம் வடகாடு காவல்நிலைய காவலருக்கு  மூதாட்டி தகவல் தெரிவித்த உடனே இத்தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று வடகாடு காவல் நிலைய காவலர் 446 திரு.யாசர் அராபத்  அவர்கள் ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆலங்குடி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று   சிகிச்சையளித்து, ஆதரவற்ற மூதாட்டியை  வல்லத்திராகோட்டை அருகே உள்ள முதியோர் இல்லத்தில்  பாதுகாப்பாக சேர்த்தார். ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய காவலரின் இச்செயலை பொது மக்கள் பலர் வெகுவாகப் பாராட்டினார்கள். என்றும் மக்கள்

தமிழக அரசு அறிவித்தபுதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை

Image
தஞ்சை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,765 மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை. வழங்கப்படுகிறது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்IAS தெரிவித்தார்.  புதுமைப்பெண் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில்  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காணொலிக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் தஞ்சை மாவட்ட மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் வழங்கினார் இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்IAS தலைமை தாங்கி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்த

திருச்சி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்தை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

Image
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் 1 மாத காலமாக 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலர் அவதியுற்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ChiefReporter.S.Velmurugan.

இந்தியகடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்த்தார்.

Image
கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி (செப்.,2) நாட்டுக்கு அர்ப்பணிக்த்தார்.  இந்தியகடற்படைக்காக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, 'வார்ஷிப் டிசைன் பீரோ' என்ற நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்தது. கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' இந்த கப்பலை உருவாக்கியது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது.  முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உபகரணங்களை தயாரித்து தந்துள்ளன.மொத்தம், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது. 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறன் உடையதுஎன்பதுகுறிப்பிடதக்கது.  துணைஆசிரியர்.S.சுந்தர்

01.09.2022 ம் தேதிசேலம் மாநகரத்தில் அதிவிரைவு படை (Quick Reaction Team) புதிதாக காவல் ஆணையர்.நஜ்மல்ஹோதா IPS அறிமுகம் செய்து துவக்கிவைத்தார்.

Image
 01.09.2022 ம் தேதிசேலம் மாநகரத்தில் அதிவிரைவு படை (Quick Reaction Team) புதிதாக காவல் ஆணையர்.நஜ்மல்ஹோதா IPS அறிமுகம் செய்து . அதற்கான வாகனம், உடைகள், துப்பாக்கி, ஒலிபெருக்கி, கையெறி குண்டுகள், முதல் உதவி பெட்டி, தீயணைப்பான், முக கவசங்கள் இதனுடன் (Tripod) டிரைபாய்டு கேமரா,(Drone Camera) ட்ரோன் கேமராவும் அறிமுகம் செய்து அதன்செயல்பாடுகளை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்மல்ஹோதா IPS அவர்கள் பார்வையிட்டு துவக்கி வைத்தார். அப்போது காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்கள், காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் காவல் உதவி ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு) திரு.T.சரவணன் மற்றும் ஆகியோர் உடன் இருந்தனர். சிறப்புநிருபர்.ஆசிப்முகம்மது.

மதுரைமாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வுஏற்படுத்திவவரும் காவல்துறையினர்

Image
. மதுரை மாவட்டத்தில்  பேரையூர் உட்கோட்டத்தில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத்  IPS  அவர்கள் உத்தரவின் பேரில், பேரையூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  செல்வி. இலக்கியா அவர்கள் மேற்பார்வையில், காவல்துறையினர்                           டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ,  மாணவிகளுக்கு போதைப்பொருள் உபயோகத்தினால் ஏற்படும் பின் விளைவுகளை குறித்து காவல்துறையின் சார்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.                       இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்கள் குறித்த, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு   டி. கல்லுப்பட்டி காவல் நிலைய, காவல் ஆய்வாளர்  திரு. பத்மநாபன் அவர்கள், பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.  நிருபர்.J.பீமராஜ்.