குற்றசம்பவங்களை தடுக்க கண்டறிய அரசு அறிவித்தபடி திருச்சிமாநகரபோக்குவரத்து காவல்துறையினருக்கு 12 BWC கேமராக்களை வழங்கி அறிவுரை கூறிய காவல்ஆணையர்.G.கார்த்திகேயன் IPS



 திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்IPS, அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும்  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.

தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு 12 Body Worn Cameras வழங்கப்பட்டது. (பணியின் போது சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வது). 

மேற்கண்ட 12 BWC கேமராக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தில் உள்ள 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா 2 வீதம் 12 Body Worn Cameras போக்குவரத்து காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியும், மேம்படுத்தி சீர்செய்யவும், மேலும் வாகன தணிக்கையின்போது ஏற்படும் இடர்பாடுகளை மேற்கண்ட கேமரா பதிவுகளை கொண்டு சரிசெய்யவும், சாலை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யும்போது உபயோகப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களை கண்டறிந்து, கேமரா பதிவுகளை கொண்டு உயரதிகாரிகள் ஆய்வு செய்யும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் வழங்கி, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இதன் பயன்பாடு குறித்து தக்க அறிவுரைகளை வழங்கினார்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.