ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்ததென்காசி காவல்துறையினர்.SP.பாராட்டு.


தென்காசி மாவட்டம், இராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி மற்றும் சந்திரன் ஆகிய ஆறு நபர்களுக்கு பாத்தியப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை,கடைக்குட்டி தம்பியான சந்திரன் என்பவர் மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்ததாக சரோஜினி கடந்த 06/09/2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சாந்திச்செல்வி அவர்கள் துரிதமாக விசாரணை மேற்க்கொண்டு மேற்படி நிலத்தை அபகரித்த சந்திரன் என்பவரிடம்  ஆவணம் ரத்து செய்யப்பட்டது.

பின்பு மீட்கப்பட்ட நிலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் முன்னிலையில் தங்கராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிலத்தைப் பெற்றுக் கொண்ட தங்கராசு மற்றும் அவர்களது சகோதர, சகோதரிகள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

நிருபர்.அண்ணாமலை.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.