திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் செல்போன் பறித்த நபர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மீட்பு.காவல்குழுவினருக்கு காவல்ஆணையர் G.கார்த்திகேயன் IPS.பாராட்டு


திருச்சி மாநகரில் கடந்த 20.08.22-ந்தேதி, இரவு 11.30மணிக்கு திருவானைக்கோவில் நாகநாதர் டீ கடை முன்பு ஏழாம்சுவை உணவகத்தில் பணிபுரியும் ஆனந்த்  என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், ஆனந்த் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்று, மேற்படி செல்போன் பறிப்பு சம்பவ நடைபெற்ற சில நிமிடங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன் IPS  அவர்கள் உடனடியாக வான்செய்தி ((Walkie Talkie) வழியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க இரவு பணியிலிருந்த காவல் அதிகாரிகள், ரோந்து பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ரோந்து வாகனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.


திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவையடுத்து திருச்சி மாநகரத்தில் இரவு பணியில் இருந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை செய்தும், மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மூன்று நபர்களும். மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முற்படும்;போது, 



அங்கு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் இருந்த SSI. திரு.பாஸ்கர், தலைமைக்காவலர்கள் திரு.டேவிட்சாலமன், திரு.செந்தில், திரு.ஜோசப் சகாயராஜ் ஆகியோர்கள் செல்போன் கொள்ளையர்களை சம்பவ இடத்திலேயே மடக்கிபிடித்து கைது செய்தார்கள். மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்த மேலும் 3 செல்போன்கள் உட்பட (மொத்தம் 4 செல்போன்கள்) பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் 1) விக்னேஸ்வரன் 2) அஜெய்ராஜ் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். 

மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு, கைது செய்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், IPS அவர்கள் வெகுமாக பாராட்டி, மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தமைக்காக பணிநற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.