கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை காவல்துறையினர் அதிரடி.


கரூர் மாவட்டம்  கரூர் நகர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கமேடு NSK பகுதியை சேர்ந்த கந்தன் (எ) கந்தசாமியும்  அவரது நண்பர் ரூபன்ராஜ் என்பவரும் பெரிய ஆண்டன் கோவில் பெரியார் வளைவு மேம்பாலம் அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக  கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் சோதனையில் ஈடுபடும்போது, 

சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை  செய்து கொண்டிருந்த அவர்களது கூட்டாளி சென்றாயன், கஸ்தூரி, கவாஸ்வர் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 44 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்கள் மற்றும் TN 60 Q 2391 TATA UltraTruck என்ற வாகனங்களையும், மேலும் ஆறு நபர்களையும் சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.V.கீதாஞ்சலி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள்  கைது செய்யப்பட்டனர்.  மேற்படி நபர்களிடமிருந்து  சுமார்  44 கிலோ கஞ்சா, மற்றும்  இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசார்  பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குட்கா அல்லது கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கைப்பேசி எண்:9498188488 என்ற எண்ணிற்கு நேரடியாக தெரிவிக்கலாம் மாவட்டகால்து அறிவித்துள்ளது.

நிருபர்.நூர்முகம்மது.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.