ரூ. 7½ லட்சம் மதிப்புள்ள நிலங்களை உரியவர்களுக்கு மீட்டுக்கொடுத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.SP.பாராட்டு.

திருநெல்வேலிமாவட்டம் பாளையங்கோட்டை, குலவணிகர்புரத்தைச் சேர்ந்த நம்பி(73) என்பவருக்கு சொந்தமான ரூ. 2½ லட்சம் மதிப்புள்ள 41 செண்ட் இடம் நாங்குநேரி, இளங்குளம் பகுதியில் உள்ளது. அதேபோல் தென்கலம் புதூரைச் சேர்ந்த நிலமேனிச்செல்வன்(53) என்பவருக்கு சொந்தமான ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 87 செண்ட் இடம் தென்கலம் பகுதியில் உள்ளது.

 மேற்கண்ட நபர்களின் இடங்களை போலி ஆவணம் மூலம்‌ வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் நம்பி, நிலமேனிச்செல்வன் ஆகிய இருவரும் நிலங்களை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS, அவர்களிடம் மனு அளித்தார். 

மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மீராள்பானு அவர்கள், உதவி ஆய்வாளர்கள் திருமதி. சோபியா, திரு. முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு,  நம்பி என்பவருக்கு சொந்தமான 41 செண்ட் நிலத்தையும், நிலமேனிச்செல்வன் என்பவருக்கு சொந்தமான 87 செண்ட் நிலத்தையும் மீட்டு அதற்கான ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன் IPS அவர்கள் நில உரிமையாளர்களிடம்   மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 7½ லட்சம் மதிப்புள்ள நிலங்களை மீட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.