தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை இயக்குனர். DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS. கூறினார்



 தமிழக காவல்துறை இயக்குனர்.DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS அவர்கள் 15-09-22, தஞ்சை வந்தார். தஞ்சை மாவட்ட காவல்கண்காளிப்பாளர் அலுவலகத்தில் காவல்அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

 பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு காவல் நிலையம் அருகே சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் அருகே பாக்குவரத்து விதிமுறைகள் குறித்த சிறுவர்களுக்கான நவீன பூங்கா அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பொருத்தம் பின்னர் DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5.5 கோடி மதிப்பில், 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான நவீன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் குற்றங்களை குறைக்க முடியும். வாகனத்தின் மீது மோதி விட்டு தப்பியோடியவர்களின் வாகன எணணை தெளிவாக கண்டறியலாம்.தஞ்சையில் உள்ள தனியார் உணவகத்தில் 5½ கிலோ நகை கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன. 

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 822 மகளிர் காவல் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள். மேலும் 1,480 காவல் நிலையங்களில் ஒரு காவல் அதிகாரியை குழந்தைகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்கொலையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது திருச்சி மத்திய மண்டலகாவல்துறைதலைவர் IG. சந்தோஷ்குமார்,IPS, தஞ்சை காவல்சரக DIG. கயல்விழி IPS, மாவட்ட காவல்கண்காணிப்பாளர்SP.  ரவளிபிரியா IPS, தஞ்சைமாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நிருபர்.R.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.