தகுந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.


வேலூர் தெற்கு காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் இளவரசி 17.9.2022 அன்று அதிகாலை 2 மணிக்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்த பொழுது  காவல் நிலையத்தின் எதிரே சாலை ஓரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தார்.

 உடனே  காவல் நிலையத்திற்கு ஓடி வந்த இளவரசி, அங்கிருந்த உதவி ஆய்வாளர் பத்மநாபன், பெண் காவலர் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்றார். அவர்கள் 

108 ஆம்புலன்சை அழைப்பதற்குள் அந்தப் பெண்ணிற்கு பிரசவ வலி அதிகமானதால் பெண் காவலர்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.   இதையடுத்து  தாயையும், குழந்தையையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் பெண்ட்லாண்ட் அரசு  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.   அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.  ஆதரவற்ற அந்தப் பெண்ணிற்கும் குழந்தைக்கும் காவலர்கள் தேவையான உடைகள் மற்றும் இதரப் பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் வாங்கிக் கொடுத்தனர்.

 இச்சம்பவம் பற்றி அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C.. சைலேந்திரபாபு IPS அவர்கள்  உதவி ஆய்வாளர் திரு.பத்மநாபன், பெண் தலைமை காவலர் இளவரசி மற்றும்  பெண் காவலர் சாந்தி ஆகியோரை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி அவர்களின் மனிதாபிமான செயலை வெகுவாகப் பாராட்டினார்கள்.

துணைஆசிரியர்.G.ஶ்ரீநிவாசன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.