போலீஸ் பார்வை குழுமம் இந்திய பேனா நண்பர் பேரவை மகாத்மா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்



 போலீஸ் பார்வை மாத இதழ் குழுமமும், இந்திய பேனா நண்பர் பேரவை குழுமமும் இணைந்து நடத்திய, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும், மகாத்மா கண் மருத்துவமனை வழங்கிய இலவச கண் சிகிச்சை முகாம் .குண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மிக  விமர்சியாக நடைபெற்றது முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் குண்டூர் பர்மா காலனி T. லட்சுமி திருமுருகன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.






போலீஸ் பார்வை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர் என் பாலகிருஷ்ணன் இந்திய பேனா நண்பர் பேரவை தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு உழவர் தியாகசாந்தன் அவர்கள் முன்னிலை வகித்து கண்சிகிச்சை முகாமுக்கான ஏற்பாடுகளை செய்தனர்



முகாமில் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் அதில் 22. நபர்கள் அறுவை சிகிச்சை மற்றும் லென்ஸ் பிட்டிங் காக தேர்வு செய்யப்பட்டனர் சிகிச்சைக்கு தேர்வானவர்களை மகாத்மா கண் மருத்துவமனை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை லென்ஸ் பிட்டிங் மற்றும் முழு கண் சிகிச்சை முடிந்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு மகாத்மா கண் மருத்துவமனை வாகனத்தில் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் கண் சிகிச்சை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது









 க ண்சிகிச்சை முகாமில் போலீஸ் பார்வை முதன்மை ஆசிரியர் KT. சிவகுமார் வழக்கறிஞர், தலைமை நிருபர். நா. ராகேஷ் சுப்பிரமணி, சிறப்பு நிருபர் மு. பாண்டியராஜன், நிருபர் சே. மணிகண்டன், இந்திய பேனா நண்பர் பேரவை திருச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமிற்கான உதவிகளை செய்தனர் கண் சிகிச்சை முகாம் முடிந்தவுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் போலீஸ் பார்வை குழுமமும் இந்திய பேனா நண்பர் பேரவை குழுமமும் இணைந்து மரக்கன்று நட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SpecialReporter.M.Pandiyarajan,S.Manikandan.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.