விழுப்புரம் மாவட்டம்சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில்நடைபெற்றது.

 

சென்னை ஐஐடி தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியோருடன் இணைந்து சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 1,2,3 ஆகிய ஓங்கூர் முதல் மடபட்டு வரை உள்ள வழித்தடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சில வழிகாட்டு முறைகள் எடுத்துக் கூறப்பட்டது.அதில் விபத்துக்கள் ஏற்பட மூன்று முக்கிய காரணங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 

1.அதிவேக பயணம் 2.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் 3.சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பேசப்பட்டது.

சாலை பாதுகாப்பு பணிகள் குறித்தும் மேம்பாலங்கள் வரும் வழித்தடங்களில் நீண்ட வழிதடமாக இருந்து பின்பு மேம்பாலங்களில் அருகில் வரும்போது குறுகிய வழித்தடங்களாக இருப்பதாலும் இதை முன்கூட்டியே கணிக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு பாதகைகள் வைக்க வலியுறுத்தப்பட்டது.

மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் ஆக்சிடென்ட் ஜோன் என்ற பிரதிபலிப்பான் கொண்டு அறிவுறுத்தும் பொருட்டு பதாதைகள் வைக்கவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் எளிதில் வாகன விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம் எனவும்.

செங்கல்பட்டு TO திருச்சி வரை உள்ள நெடுஞ்சாலை ரோந்து காவலர்களுக்கு WhatsApp குழுக்கள் அமைத்து அடுத்தடுத்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை அறிவுறுத்தும் பொருட்டு குழுவில் பகிரவும் அவர்களை கண்காணிக்கவும் WhatsApp குழு உருவாக்கவும்.

மேலும் குடித்துவிட்டு வானங்களை இயக்குபவர்களை அந்தந்த எல்லைக்குட்பட்ட டோல் கேட்டிலேயே நிறுத்தி சோதனை செய்து தடுத்து நிறுத்தவும்  அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா IPS.,  காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிருபர்.ராமநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.