திருச்சி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்தை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் 1 மாத காலமாக 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலர் அவதியுற்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ChiefReporter.S.Velmurugan.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.