திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ப்புநிகழ்ச்சி.


சமூக நீதி நாள் உறுதிமொழி 17.09.2022  திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்களின் தலைமையில்  மாவட்ட குற்ற ஆவணக்காப்பக பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பெரியசாமி அவர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெபராஜ் அவர்கள் (SJHR)  மற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்!  சுயமரியாதை ஆளுமை திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!  சமத்துவம்,  சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!  மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்! சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைந்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்!” என்று உறுதிமொழி ஏற்றனர்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.