Posts

Showing posts from March, 2022

தூத்துக்குடி மாவட்டம்: கொலையாளிகள்கைது தனிபடை காவல்குழுவினருக்கு SP.Dr.L.பாலாஜி சரவணன் பாராட்டு

Image
  சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடந்த பவானி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகள் இருவர் கைது - தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி பவானி (62) என்பவர் 24.03.2022 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து துணியால் கழுத்தை இறுக்கி, கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த ரூபாய் 15,000/- மதிப்புடைய 4 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. பாலாஜி சரவணன் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ் குமார் IPS ஆகியோர்

கும்பகோணம்,அருகே.டி.மாங்குடியில் மிகபழமையான நடராஜர் சிலை மீட்பு

Image
  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள டி.மாங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்தமான சிலை பட்டறையில் பழமையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் அவர்கள் தலைமையில், துணை காவல்கண்காணிப்பாளர் திரு.கதிரவன், அவர்கள் மேலும் இன்ஸ்பெக்டர் திரு.முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.ராஜசேகரன், திரு.செல்வராஜ் மற்றும் தலைமைக் காவலர் திரு.கொளஞ்சிநாதன் காவலர்கள் திரு.சுந்தர் திரு.கிருபாகரன் திரு.சிவா அவர்கள் அடங்கிய தனிப்படையினர் கோர்ட்டில் முன் அனுமதி பெற்று சதீஷ்குமாரின் சிலை பட்டறையில் 29.03.2022 அன்று சோதனை நடத்தினர அப்போது அங்கு 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பழமையான நடராஜர் உலோக சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.  இந்த சிலைக்கான முறையான ஆவணங்கள் குறித்து சதீஷ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செ

சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் போதிய விழிப்புடன் செயல்பட வேண்டும்; டிஜிபிDr.C. சைலேந்திரபாபு IPS வலியுறுத்தல்.

Image
விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விழுப்புரம்  சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட காவல்துறை  அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று 31-03-22 நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை DGP. Dr.C. சைலேந்திரபாபுIPS கலந்து கொண்டார்.  அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடம் நேரடியாக பெறப்படும் குறைதீர் மனுக்களின் தன்மை மற்றும் அம்மனு மீதான நடவடிக்கைகள் குறித்து கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுதல், காவல்துறை -  பொதுமக்கள் நல்லுறவு போன்றவற்றில் திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு, DGP.Dr.C. சைலேந்திரபாபுIPS பாராட்டு சான்றிதழ் வழங்கினார். DGP பேசுகையில், நான் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் சரகத்தில் பணியாற்றியிருக்கிறேன்.  அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு சாதிய மோதல்கள், குற்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.  அப்போது, அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், அதன்பின் கடந்த 10 ஆண்டுகளில், வட மாவட்டங்களில் பெரிய அளவிலான சாதிய மோதல் சம்பவங

கோவை மாவட்டம்:சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனைக் கு வைத்திருந்த வட மாநிலத்தவர்கள் கைது.

Image
கோவை மாவட்டம்:சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை  விற்பனைக் கு வைத்திருந்த வட மாநிலத்தவர்கள் கைத கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. , அவர்கள் உத்தரவின்பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தேடிவந்த நிலையில் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு. குப்புராஜ் மற்றும் திரு. ரவி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செலக்கரச்சல், லட்சுமி நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுப்புராம் மகரணா(40) மற்றும் சுதர்சன் புகான் (40) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 70 கிலோகிராம் கஞ்சா, ரூபாய் 5,100/- மற்றும் இருசக்கர வாகனம் -1 பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர  இவ்வழக்கில் திற

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திகணேசன் IPS அவர்கள் பெண்களின் நலன் காக்க Ladies First 82200 06082 , முதியோர்களின் நலன் காக்க Hello Senior 82200 09557 என்றஎண்களைஅறிவித்

Image
புதிய காவல் உதவி எண்கள் மூலம் புகார்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த கன்னிகா பரமேஸ்வரி வயது 43 என்பவர் ladies first காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு , மனுதாரருக்கு குழந்தை இல்லை என்கிற காரணத்தினால் மனுதாரரின் மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமை செய்வதாக புகார் தெரிவித்ததன்பேரில் , உடனடியாக நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மனுதாரரின் மாமியார் மற்றும் நாத்தனாரை கடுமையாக கண்டித்து பின்பு தக்க அறிவுரை வழங்கியதின்பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது . புதுச்சத்திரம் காவல் சரகம் வில்லியனூர் கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி வயது 70 என்பவர் தனது பேரன்களான பிரபு , ரமேஷ் , முருகன் ஆகியோர் தனக்கு சாப்பாடு போட மறுப்பதாகவும் , தன்னிடம் பிரச்சனை செய்வதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் கொடுத்த புகார் மனு தொடர்பாக Hello Senior காவல் உதவி எண் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர். பாலாஜி அவர்கள் விசாரணை மேற்கொண்டு மூதாட்டி ராஜலட்சுமியின் பேரன்களான பிரபு . ரமேஷ்

தென்காசிமாவட்டம்:தென்காசியில் காணாமல் போன சிறுவனை டெல்லி சென்று மீட்டு வந்த தென்காசி காவல்துறையினருக்கு பாராட்டு

Image
  தென்காசி மாவட்டம்,கடந்த 11.03.2022 ஆம் தேதி  பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் புவனேஷ் (17) என்பவர் காணாமல் போனது தொடர்பாக தென்காசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல்போன சிறுவனை தேடி வந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கிரீஸ் யாதவ் IPS மற்றும் காவல் ஆய்வாளர் திரு.K.S. பாலமுருகன் ஆகியோர் சிறுவனின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து கண்காணித்து  வந்ததில் சிறுவன்  இமாச்சலப் பிரதேசம் மணலி சென்றிருப்பதை அறிந்து  தொடர் கண்காணிப்பில் சிறுவன் டெல்லியில் இருப்பதை உறுதிசெய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்  திரு.K.S. பாலமுருகன் அவர்கள் டெல்லி விரைந்து சென்று டெல்லி போலீசாரின் உதவியுடன் சிறுவனை கண்டுபிடித்து டெல்லியில் இருந்து சிறுவனை அழைத்து வந்து காவல் அதிகாரிகள் சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கி அவரது பெற்றோருடன்  சேர்த்து வைத்துள்ளனர்.சிறப்பாக செயல்பட்டு டெல்லி சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு வந்த தென்காசி காவல் துறையினருக்கு மாவட்

சென்னைபெருநகர்நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு; சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிIPS அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து..

Image
சென்னை  வடக்கு மண்டல இணைய ஆணையராக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டவர் ரம்யா பாரதி IPS தனது சிறப்பான பணியின் மூலம் கவனம் பெற்ற ரம்யா பாரதி, 24-03 22 நள்ளிரவில் திடீரென சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டார். அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சென்னை வடக்கு மண்டலத்தில்  தனது கட்டுப்பாட்டில்  உள்ள  பூக்கடை , வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட  8 காவல் நிலையங்களில்  சைக்கிளிலேயே சென்று ஆய்வு செய்தார். சுமார் 9 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்று  இரவு ரோந்து வாகன காவலர்கள், பீட் அதிகாரிகள் மற்றும்  காவல்துறையினர்  முறையாக பணி செய்கிறார்களா என்றும்  ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது காவல் துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் ரம்யா பாரதிIPS அறிவுரை வழங்கினார்.  நள்ளிரவு நேரத்தில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர்  ரம்யா பாரதி அடித்த இந்த திடீர் விசிட் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இணை ஆணையர் ரம்யா பாரதியை பாராட்டியுள்ளார். அதில், “ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்

வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற நபரை 3 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு DIG பாராட்டு.

Image
23.03.2022-ம் தேதி நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த பாப்பா(37), என்பவர், மூன்றடைப்பு அருகே உள்ள  தாழைகுளம் பேருந்து நிலையம் அருகே  நடந்து சென்று கொண்டிருந்த  போது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி பெண்ணை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த கவரிங் செயின், ரூ.1700 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அருகிலிருந்த காவல் நிலையங்களுக்கு இருசக்கர வாகனம் அடையாளம்  மற்றும் வழிப்பறி ஈடுபட்ட நபர்களின்  அடையாளம் குறித்து தகவல் அளித்தனர். அதன்பேரில் சேரன்மகாதேவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கண்ணன்(ப) மற்றும் காவலர் திரு.செல்லப்பாண்டி ஆகியோர்  ரோந்து   பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சேரன்மகாதேவியிலிருந்து  பாபநாசம் செல்லும் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள்  போலீசாரை  கண்டதும் தப்பி செல்லமுயலும் போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நபர் சாத்தான்குளம், மேலபுளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (22) என்பதும் மூன்றடைப்பு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபர் என்பதும் தெரியவந்தத

போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

Image
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்P.சரவணன் IPS அவர்கள், பொதுமக்களுக்கு புகையிலைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும்  தீமைகள் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு  அறிவுறுத்தியிருந்தார். இதன்படி 28.03.2022  கங்கைகொண்டான், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை கொழுந்துபுரம் மற்றும் தாழையூத்து ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும்  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது   தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா,கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால்  காவல்துறைக்கு உடனே  தெரிவிக்கும் படியும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

ஆனந்த கண்ணீரில் நெகிழ்ச்சியோடு கொண்டாடிய இந்நாள் முன்னாள் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விழா

Image
 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள V.R.V மஹாலில் 17.3.2022  தமிழ்நாடு சிறப்பு காவல் படை  ,8-ஆம் அணி    வீராபுரத்தில் 17.03.1986 காவலராக பணியில் சேர்ந்த 450 காவலர்கள்  36,ஆண்டுகள் பணிமுடித்து 37,ஆண்டு துவக்கத்தை பயிற்சி முடித்த மண்ணில் கொண்டாட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்து பழைய நண்பர்களை சந்தித்து ஆர தழுவி பாசத்தில் ஆனந்தகண்ணீர் விட்டனர் காவலராக பணியில் சேர்ந்த நண்பர்கள் D.S.P இன்ஸ்பெக்டர் உதவி ஆய்வாளராக பணியில் இருந்தாலும் நண்பர்களாக அளவளாவினார்கள் மேலும் பணி ஓய்வு பெற்ற நண்பர்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்யபட்டது நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மூத்த ஆய்வாளர் திரு.திருமலைராஜ் தலைமை தாங்கினார் திரு.இராமலிங்கம் உதவிஆய்வாளர் வரவேற்பு உரை சிறப்பு உரையாக த.சி.கா 3,ஆம் அணி SP திரு. இரவிச்சந்திரன் பாராட்டி பேசி நிணைவு பரிசுகள் வழங்கினார் இந்த குழுவை ஒருங்கிணைத்த ஓய்வு பெற்ற ஆய்வாளர் திரு.அன்பழகன், திரு.பிரசாத், திரு.நேரு, திரு.வெங்கடேசன் திரு.சென்னப்பன் ஆகியோர்.  நன்றி உரை திரு.கணேசன் உதவிஆய்வாளர். துணைஆசிரியர்.S.முருகானந்தம்

தென்காசி மாவட்டம் காவல்துறை பொதுமக்கள் இடையே நல்லுறவு விளையாட்டு போட்டி:

Image
போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ், இ.கா.ப.¸ அவர்களின் அறிவுரையின்படி 27.03.2022-ம் தேதி தென்காசி ஹவுசிங் போர்டு விளையாட்டுத் திடலில் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கையுந்துப் பந்து (வாலிபால்) விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த வாலிபால் விளையாட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 72 அணியினர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிவகாமிபுரம் அணியினர் முதல் பரிசையும், தென்காசி மாவட்ட காவல்துறை அணியினர் இரண்டாம் பரிசையும், தென்காசி “Well takers” அணியினர் மூன்றாம் பரிசையும் வென்றனர். மேலும் வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையினை வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  இப்போட்டியின் போது அனைவரும் “Yes to Sports, No to Drugs” என்ற உறுதிமொழி ஏற்றனர். நிருபர்.அண்ணாமலை

குத்துச்சண்டையில் சர்வதேச பட்டம் வென்ற காவலர் வீரமணி அவர்களை DGP Dr.C.சைலேந்திரபாபு IPS நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு

Image
சென்னை மதுரவாயலில் உள்ள எவர்லாஸ்ட்பிரேவ் இண்டர்நேஷனல் உள் அரங்கில் சர்வதேச அளவிலான, Flyweight, Heavyweight என ஏழு எடை பிரிவுகளாக நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தாம்பரம் ஆயுதப்படையில்  பணியாற்றும் காவலர் திரு. வீரமணி அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச பட்டத்தை வென்று இந்திய நாட்டிற்கும்¸  தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்தார்.காவலர் திரு.வீரமணி அவர்களை DGP Dr.C.சைலேந்திரபாபு IPS நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.  TambaramCityPolice EverlastbraveInternational Flyweight Heavyweight Boxing Winninginternationaltitle  துணைஆசிரியர்.ஹரிகிருஷ்ணன்

தமிழ்நாடுகாவல்துறையில் புதிதாக தேர்வான இரண்டாம்நிலை காவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

Image
தமிழ்நாடு காவல்துறைக்கு புதியதாக தேர்வான இரண்டாம் நிலை காவலர் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020-ஆம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணையிணை வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகரில் 20 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 21 நபர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணையை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள்  நேற்று (08.03.22)-ம்தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் வழங்கினார்கள். மேற்படி தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 14.03.2022-ஆம் தேதி முதல் 7 மாத காலம் பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சியும், ஒரு மாத காலம் மாவட்ட / மாநகரகத்தில் நடைமுறை பயிற்சியும், ஆக மொத்தம் 8 மாத காலங்கள் காவல் பயிற்சி பெற்ற பின்னர் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட / மாநகர ஆயுதப்படைகளில் தேவைக்கேற்ப பணி நியமனம் செய்யப்படுவர்கள். மேலும், தமிழ்நாடு காவல்துறைக்கு புதியதாக பணி நியமனம் பெற்ற நபர்களை வாழ்த்த

திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ள யடிக்கப்பட்ட நகைகளைமீட்ட மாநகரகாவல்துறையினர்

Image
திருப்பூர் நகை அடகு கடையில் சுமார் 3 கிலோ தங்கம் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்த பீகார் மாநிலத்தின் கொள்ளையர்களை, மிகச்சிறப்பாக துரிதமாக சிசிடிவி பதிவை வைத்து,  இரயில்வே காவல்துறையினர் உதவியுடன் கைது செய்து, அனைத்து நகைகளையும் மீட்டு எடுத்துள்ள திருப்பூர் மாநகர காவல் ஆணையர் AG Babu IPS , துணை ஆணையர் திரு அரவிந்த் தலைமையிலான தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குழுவினரை அனைவருக்கும் பாராட்டினர். நிருபர் - KCM சுரேஷ்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS காவல் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Image
சர்வதேச மகளிர் தினம் 08.03.2022 இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலும் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும்  மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார். தலைமை நிருபர் - சண்முகநாதன் 

தேனி எரசை வலசை காடு மலை அடிவாரத்தில் மான் வேட்டையாடும் நாய் வேட்டையர்கள் அட்டூழியம்.

Image
  தேனி மாவட்டம் எரசை வலசை காடு மலை அடிவாரத்தில் நாய்களை கொண்டு மானை வேட்டையாடும் நாய் வேட்டையர்கள் அட்டூழியம் செய்து வருவதால்,வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நாய் வேட்டையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து கோரிக்கை வைத்துள்ளனர் . தேனி மாவட்டம் வலசை காடு  மலை அடிவாரத்தில் வேட்டை நாய்களைக் கொண்டு தினமும் மானை வேட்டையாடி மானைக் கொன்று அந்த கரி யை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதால்  அங்கு உள்ள  சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மேலும் அதேபோன்று காட்டு பன்றியை தினமும் கண்ணி வைத்து வேட்டையாடி அந்த கரியை எடுத்து சென்று விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது,மானை கொல்வது சட்ட ரீதியாக பெரும் குற்றமாக கருதும் வகையில், வலசை காடு மலை அடிவாரத்தில் தினமும் தொடர்ந்து நாய்களை கொண்டு மானை வேட்டையாடி, மான் கரி யை விற்பனை செய்துவரும் மான்வேட்டை கொள்ளையர்கள் மீது வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில் என்பதாக புகார் எழுந்துள்ளது,எனவே மான் வேட்டை கொள்ளையர்கள் மீது வனத்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் ,சமூக ஆர்வலர

தமிழ்நாடு மாணவர்கள் ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டுப் போட்டியில் சரித்திர சாதனை!

Image
ஏழாவது தேசிய அளவிலான ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற அனைத்து பிரிவிலும் 55 தமிழக மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளனர். ஏழாவது தேசிய அளவிலான ஏரோஸ் கேட்டோபால் (AEROSKATOBALL)விளையாட்டு போட்டி மார்ச் மாதம் 4,5 மற்றும் 6ஆம் தேதி மிக பிரமாண்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் சேட்டன் பகவாட் தலைமையில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் அசோசியன் சங்கம் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில், சங்க பொதுச்செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் ஆகியோர் சிறந்த முறையில் பயிற்சியாளர்களை கொண்டு 55 க்கும் மேற்பட்ட மாணவர்களை பங்கேற்க செய்துள்ளனர்.  10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு,  14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு,  18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவி,  18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் பிரிவு,  10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு,  14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு ஆகிய பிரிவுகள் அனைத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களே முதல் இடத்தை பிடித்தனர்,