போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்P.சரவணன் IPS அவர்கள், பொதுமக்களுக்கு புகையிலைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும்  தீமைகள் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு  அறிவுறுத்தியிருந்தார். இதன்படி 28.03.2022  கங்கைகொண்டான், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை கொழுந்துபுரம் மற்றும் தாழையூத்து ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும்  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது   தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா,கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால்  காவல்துறைக்கு உடனே  தெரிவிக்கும் படியும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.