சென்னைபெருநகர்நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு; சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிIPS அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து..

சென்னை  வடக்கு மண்டல இணைய ஆணையராக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டவர் ரம்யா பாரதி IPS தனது சிறப்பான பணியின் மூலம் கவனம் பெற்ற ரம்யா பாரதி, 24-03 22 நள்ளிரவில் திடீரென சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டார். அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சென்னை வடக்கு மண்டலத்தில்  தனது கட்டுப்பாட்டில்  உள்ள  பூக்கடை , வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட  8 காவல் நிலையங்களில்  சைக்கிளிலேயே சென்று ஆய்வு செய்தார். சுமார் 9 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்று  இரவு ரோந்து வாகன காவலர்கள், பீட் அதிகாரிகள் மற்றும்  காவல்துறையினர்  முறையாக பணி செய்கிறார்களா என்றும்  ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது காவல் துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் ரம்யா பாரதிIPS அறிவுரை வழங்கினார்.  நள்ளிரவு நேரத்தில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர்  ரம்யா பாரதி அடித்த இந்த திடீர் விசிட் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இணை ஆணையர் ரம்யா பாரதியை பாராட்டியுள்ளார். அதில், “ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


 தலைமைநிருபர்.மணிகண்டன்முருகதாஸ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.