கும்பகோணம்,அருகே.டி.மாங்குடியில் மிகபழமையான நடராஜர் சிலை மீட்பு

 


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள டி.மாங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்தமான சிலை பட்டறையில் பழமையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


இதையடுத்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் அவர்கள் தலைமையில், துணை காவல்கண்காணிப்பாளர் திரு.கதிரவன், அவர்கள் மேலும் இன்ஸ்பெக்டர் திரு.முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.ராஜசேகரன், திரு.செல்வராஜ் மற்றும் தலைமைக் காவலர் திரு.கொளஞ்சிநாதன் காவலர்கள் திரு.சுந்தர் திரு.கிருபாகரன் திரு.சிவா அவர்கள் அடங்கிய தனிப்படையினர் கோர்ட்டில் முன் அனுமதி பெற்று சதீஷ்குமாரின் சிலை பட்டறையில் 29.03.2022 அன்று சோதனை நடத்தினர

அப்போது அங்கு 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பழமையான நடராஜர் உலோக சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. 


இந்த சிலைக்கான முறையான ஆவணங்கள் குறித்து சதீஷ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  நடராஜர் சிலையை காவல்துறையினர் மீட்டனர்.

இந்த நடராஜர் சிலை தமிழகத்தில் உள்ள வேறு எந்தவொரு கோவிலுக்கும் சொந்தமான ஒன்றா என்ற கோணத்தில் 

 விசாரணை நடைபெறுகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால், மீட்கப்பட்ட நடராஜர் உலோக சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும் எனவும் சிலைகடத்தல் தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்

.சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்,நிருபர்.சே.மணிகண்டன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.