தேனி எரசை வலசை காடு மலை அடிவாரத்தில் மான் வேட்டையாடும் நாய் வேட்டையர்கள் அட்டூழியம்.

 

தேனி மாவட்டம் எரசை வலசை காடு மலை அடிவாரத்தில் நாய்களை கொண்டு மானை வேட்டையாடும் நாய் வேட்டையர்கள் அட்டூழியம் செய்து வருவதால்,வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நாய் வேட்டையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து கோரிக்கை வைத்துள்ளனர் .

தேனி மாவட்டம் வலசை காடு  மலை அடிவாரத்தில் வேட்டை நாய்களைக் கொண்டு தினமும் மானை வேட்டையாடி மானைக் கொன்று அந்த கரி யை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதால்  அங்கு உள்ள  சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மேலும் அதேபோன்று காட்டு பன்றியை தினமும் கண்ணி வைத்து வேட்டையாடி அந்த கரியை எடுத்து சென்று விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது,மானை கொல்வது சட்ட ரீதியாக பெரும் குற்றமாக கருதும் வகையில், வலசை காடு மலை அடிவாரத்தில் தினமும் தொடர்ந்து நாய்களை கொண்டு மானை வேட்டையாடி, மான் கரி யை விற்பனை செய்துவரும் மான்வேட்டை கொள்ளையர்கள் மீது வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில் என்பதாக புகார் எழுந்துள்ளது,எனவே மான் வேட்டை கொள்ளையர்கள் மீது வனத்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.