வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற நபரை 3 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்த பயிற்சி உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கு DIG பாராட்டு.

23.03.2022-ம் தேதி நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த பாப்பா(37), என்பவர், மூன்றடைப்பு அருகே உள்ள  தாழைகுளம் பேருந்து நிலையம் அருகே  நடந்து சென்று கொண்டிருந்த  போது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி பெண்ணை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த கவரிங் செயின், ரூ.1700 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் அருகிலிருந்த காவல் நிலையங்களுக்கு இருசக்கர வாகனம் அடையாளம்  மற்றும் வழிப்பறி ஈடுபட்ட நபர்களின்  அடையாளம் குறித்து தகவல் அளித்தனர். அதன்பேரில் சேரன்மகாதேவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கண்ணன்(ப) மற்றும் காவலர் திரு.செல்லப்பாண்டி ஆகியோர்  ரோந்து   பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சேரன்மகாதேவியிலிருந்து  பாபநாசம் செல்லும் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள்  போலீசாரை  கண்டதும் தப்பி செல்லமுயலும் போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நபர் சாத்தான்குளம், மேலபுளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (22) என்பதும் மூன்றடைப்பு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபர் என்பதும் தெரியவந்தது. பின்னர் மேற்படி எதிரியிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட  இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள், துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு.கண்ணன்(ப) மற்றும் காவலர் திரு.செல்லபாண்டி அவர்களை நேரில் அழைத்து  பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்


தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.