தமிழ்நாடு மாணவர்கள் ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டுப் போட்டியில் சரித்திர சாதனை!

ஏழாவது தேசிய அளவிலான ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற அனைத்து பிரிவிலும் 55 தமிழக மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளனர்.

ஏழாவது தேசிய அளவிலான ஏரோஸ் கேட்டோபால் (AEROSKATOBALL)விளையாட்டு போட்டி மார்ச் மாதம் 4,5 மற்றும் 6ஆம் தேதி மிக பிரமாண்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் சேட்டன் பகவாட் தலைமையில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் அசோசியன் சங்கம் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில், சங்க பொதுச்செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் ஆகியோர் சிறந்த முறையில் பயிற்சியாளர்களை கொண்டு 55 க்கும் மேற்பட்ட மாணவர்களை பங்கேற்க செய்துள்ளனர். 

10 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, 

14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, 

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவி, 

18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் பிரிவு, 

10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு, 

14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு ஆகிய பிரிவுகள் அனைத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களே முதல் இடத்தை பிடித்தனர், 

தேசிய அளவில் தமிழ்நாடு மாணவர்கள் முதல் இடத்தையும், மகாராஷ்டிரா மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், ராஜஸ்தான் மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். 

மெய் சிலிர்க்க வைக்க கூடிய வெற்றியினை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்று கோப்பையை கைப்பற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் மாணவர்களை திறம்பட பயிற்சி பெற செய்த அபுதாஹீர், அருள் பிரகாஷ், மற்றும் பாலன் மகேந்திரன் ஆகியோருடன் இணைந்து பெற்றோர்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மாணவர்கள் சாலையில் வெற்றி பெற்ற மாணவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கியும், தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி – வரலாற்று வெற்றியினைப்பெற்று திரும்பிய தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு பெற்றோர்கள், ஏரோஸ்கேட்டோபால் சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு. ஏழாவது தேசிய அளவிலான ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற அனைத்து பிரிவிலும் தமிழக மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளனர்.

தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் அசோசியன் சங்கம் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன், சங்க பொதுச்செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன், பயிற்சியாளர்கள் அபுதாஹீர், அருள் பிரகாஷ், மற்றும் பாலன் மகேந்திரன் ஆகியோர்களுக்கு பெற்றோர்கள் அனைவரும் பூமாலை மற்றும் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.