தென்காசிமாவட்டம்:தென்காசியில் காணாமல் போன சிறுவனை டெல்லி சென்று மீட்டு வந்த தென்காசி காவல்துறையினருக்கு பாராட்டு





 தென்காசி மாவட்டம்,கடந்த 11.03.2022 ஆம் தேதி  பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் புவனேஷ் (17) என்பவர் காணாமல் போனது தொடர்பாக தென்காசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல்போன சிறுவனை தேடி வந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கிரீஸ் யாதவ் IPS மற்றும் காவல் ஆய்வாளர் திரு.K.S. பாலமுருகன் ஆகியோர் சிறுவனின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து கண்காணித்து  வந்ததில் சிறுவன்  இமாச்சலப் பிரதேசம் மணலி சென்றிருப்பதை அறிந்து  தொடர் கண்காணிப்பில் சிறுவன் டெல்லியில் இருப்பதை உறுதிசெய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்  திரு.K.S. பாலமுருகன் அவர்கள் டெல்லி விரைந்து சென்று டெல்லி போலீசாரின் உதவியுடன் சிறுவனை கண்டுபிடித்து டெல்லியில் இருந்து சிறுவனை அழைத்து வந்து காவல் அதிகாரிகள் சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கி அவரது பெற்றோருடன்  சேர்த்து வைத்துள்ளனர்.சிறப்பாக செயல்பட்டு டெல்லி சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு வந்த தென்காசி காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.கிருஷ்ணராஜ்IPS அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்

.நிருபர்.அண்ணாமலை

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.