ஆனந்த கண்ணீரில் நெகிழ்ச்சியோடு கொண்டாடிய இந்நாள் முன்னாள் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விழா
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள V.R.V மஹாலில் 17.3.2022 தமிழ்நாடு சிறப்பு காவல் படை ,8-ஆம் அணி வீராபுரத்தில் 17.03.1986 காவலராக பணியில் சேர்ந்த 450 காவலர்கள் 36,ஆண்டுகள் பணிமுடித்து 37,ஆண்டு துவக்கத்தை பயிற்சி முடித்த மண்ணில் கொண்டாட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்து பழைய நண்பர்களை சந்தித்து ஆர தழுவி பாசத்தில் ஆனந்தகண்ணீர் விட்டனர் காவலராக பணியில் சேர்ந்த நண்பர்கள் D.S.P இன்ஸ்பெக்டர் உதவி ஆய்வாளராக பணியில் இருந்தாலும் நண்பர்களாக அளவளாவினார்கள் மேலும் பணி ஓய்வு பெற்ற நண்பர்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்யபட்டது நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மூத்த ஆய்வாளர் திரு.திருமலைராஜ் தலைமை தாங்கினார் திரு.இராமலிங்கம் உதவிஆய்வாளர் வரவேற்பு உரை சிறப்பு உரையாக த.சி.கா 3,ஆம் அணி SP திரு. இரவிச்சந்திரன் பாராட்டி பேசி நிணைவு பரிசுகள் வழங்கினார் இந்த குழுவை ஒருங்கிணைத்த ஓய்வு பெற்ற ஆய்வாளர் திரு.அன்பழகன், திரு.பிரசாத், திரு.நேரு, திரு.வெங்கடேசன் திரு.சென்னப்பன் ஆகியோர்.
நன்றி உரை திரு.கணேசன் உதவிஆய்வாளர்.
துணைஆசிரியர்.S.முருகானந்தம்

.jpeg)
Comments
Post a Comment