சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் போதிய விழிப்புடன் செயல்பட வேண்டும்; டிஜிபிDr.C. சைலேந்திரபாபு IPS வலியுறுத்தல்.



விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விழுப்புரம்  சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட காவல்துறை  அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று 31-03-22 நடைபெற்றது.

 இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை DGP. Dr.C. சைலேந்திரபாபுIPS கலந்து கொண்டார்.

 அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடம் நேரடியாக பெறப்படும் குறைதீர் மனுக்களின் தன்மை மற்றும் அம்மனு மீதான நடவடிக்கைகள் குறித்து கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுதல், காவல்துறை -  பொதுமக்கள் நல்லுறவு போன்றவற்றில் திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு, DGP.Dr.C. சைலேந்திரபாபுIPS பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

DGP பேசுகையில், நான் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் சரகத்தில் பணியாற்றியிருக்கிறேன்.

 அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு சாதிய மோதல்கள், குற்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

 அப்போது, அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

 ஆனால், அதன்பின் கடந்த 10 ஆண்டுகளில், வட மாவட்டங்களில் பெரிய அளவிலான சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறவில்லை.

 இருப்பினும், காவல்துறையினர் போதிய விழிப்புடனும், துரிதமாகவும் செயல்பட வேண்டும்.

 சாதிய மோதல் சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சம்பவம் நடைபெறும் இடத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் நேரில் சென்று, அது பெரிதாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 தவறினால், அது கலவரமாகவும்,  கொலை களமாகவும் மாறிவிடும்.

 எனவே, காவல்துறையினர் எப்போதும் துரிதமாக செயல்பட ஒருபோதும் தயங்க கூடாது.

 சம்பவம் நடைபெறும் இடத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் தங்கியிருந்து, அந்த பிரச்சினை மேலும் வலுவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 பிரச்சனை பெரிதாக வாய்ப்பில்லை என்று திரும்பி வந்துவிட்டால், அந்த பிரச்சனை பெரிதாகி, ஒரு வார காலம் காவல்துறையினர் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

 இந்தக் கூட்டத்தில், வடக்கு மண்டல IG.திரு. பிரேம் ஆனந்த் சின்காIPS, விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர்(DIG) திரு.பாண்டியன்,IPS விழுப்புரம் மாவட்ட காவல்¹ கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ் IPS உள்பட பலரும் கலந்துகொண்டனர்

 முன்னதாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு காரில் வந்து இறங்கிய DGP.C. சைலேந்திரபாபு IPS அவர்களை மாவட்ட ஆட்சியர் திரு.மோகன்IAS அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்துத் தெரிவித்து வரவேற்றார்.

நிருபர்.ராமநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.