கோவை மாவட்டம்:சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனைக் கு வைத்திருந்த வட மாநிலத்தவர்கள் கைது.

கோவை மாவட்டம்:சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை  விற்பனைக் கு வைத்திருந்த வட மாநிலத்தவர்கள் கைத

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. , அவர்கள் உத்தரவின்பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தேடிவந்த நிலையில் சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு. குப்புராஜ் மற்றும் திரு. ரவி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செலக்கரச்சல், லட்சுமி நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுப்புராம் மகரணா(40) மற்றும் சுதர்சன் புகான் (40) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 70 கிலோகிராம் கஞ்சா, ரூபாய் 5,100/- மற்றும் இருசக்கர வாகனம் -1 பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர

 இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (15.03.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில்  பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்


.நிருபர்.கோவிந்தசாமி

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.