தென்காசி மாவட்டம் காவல்துறை பொதுமக்கள் இடையே நல்லுறவு விளையாட்டு போட்டி:

போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ், இ.கா.ப.¸ அவர்களின் அறிவுரையின்படி 27.03.2022-ம் தேதி தென்காசி ஹவுசிங் போர்டு விளையாட்டுத் திடலில் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கையுந்துப் பந்து (வாலிபால்) விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த வாலிபால் விளையாட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 72 அணியினர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சிவகாமிபுரம் அணியினர் முதல் பரிசையும், தென்காசி மாவட்ட காவல்துறை அணியினர் இரண்டாம் பரிசையும், தென்காசி “Well takers” அணியினர் மூன்றாம் பரிசையும் வென்றனர். மேலும் வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையினை வழங்கி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

இப்போட்டியின் போது அனைவரும் “Yes to Sports, No to Drugs” என்ற உறுதிமொழி ஏற்றனர்.


நிருபர்.அண்ணாமலை

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.