Posts

Showing posts from October, 2022

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Image
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம், கச்சிப்பட்டு கிராமத்தை சார்ந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர்   நிதியுதவி வழங்கினார். திருப்பெரும்புதூர் தனியார் உணவு விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு, விஷவாயு தாக்கி, திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கிராமத்தை சார்ந்த திரு.ரங்கநாதன் (51), திரு.நவீன்குமார் (30), திரு.திருமலை (22) ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலிருந்து அதன் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர் அவர்கள் நிதியுதவி வழங்கினார். விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியான உணவு விடுதியின் கழிவுநீர்  தொட்டியை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.இதையடுத்து விஷவாயு தாக்கி பலியான கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த திரு.ரங்கநாதன்,  திரு.நவீன்குமார், திரு.திருமலை  ஆகியோர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய தாழ்த்தப

தனிநபர்களுக்கு கடன் தருவதாக கூறி போன் மூலம் ரூ.2,03,100/- ஏமாற்றிய நபர்களை டெல்லிக்கு சென்று 5,பேரைகைதுசெய்த புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர்.

Image
  புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைபட்டினத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் கனிக்குமார் கடந்த 02-07-22 அன்று 1% வட்டியில் தனிநபர் கடன் தருவதாக தனக்கு SMS வந்ததாகவும் அன்றே அதிலிருந்த 7509100763 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசி அவர்களிடம் தனக்கு ரூ.5,00,000/- கடன் வேண்டும் என்று கூறிய பிறகு 8964033940. 8964049091 ஆகிய எண்களிலிருந்து தொடர்பு கொண்டு கனிகுமாரிடம் பேசியதாகவும். மீண்டும் தனலட்சுமி பைனான்ஸில் இருந்து பேசுவதாக 7089759101, 8527396634, 9650921807 என்ற எண்களிலிருந்து வாதியிடம் பேசி ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் போட்டோ போன்ற ஆவணங்களை அவரது வாட்ஸ்அப் எண்-7509100763 ற்கு அனுப்ப சொன்னதன் அடிப்படையில் அனுப்பியதாகவும்.  பின்பு அவர்கள் வாதியை தொடர்பு கொண்டு Document charge, Insurance லோன் Amount, கணக்கில்வரவு வைக்க DD எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு காரணங்களை கூறி பணம் கட்ட சொன்னதால் கனிகுமார், அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு  மொத்தம் ரூ.2,03,100/- தொகை அனுப்பி ஏமாந்துவிட்டதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை சைபர் கிரை

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு SP பாராட்டு.

Image
 திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில்,  சிறப்பாக பணிபுரிந்த  காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு SP பாராட்டு. மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள், தலைமையில்  அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  அப்போது சிறப்பாக பணிபுரிந்த 23 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி SP வெகுமதி வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிர் காவல்நிலைய போக்சோ  வழக்கு எதிரிக்கு 20 ஆண்டுகள்  சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இரண்டாம் நிலை காவலர் திருமதி. முத்துலெட்சுமி அவர்களுக்கும் ஒரே மாதத்தில் 4 கொலை வழக்கு விசாரணையை குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்திலிருந்து, அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு எடுக்க சிறப்பாக பணிபுரிந்த நாங்குநேரி காவலர் திரு.தளவான், அவர்களுக்கும், மேற்படி காவலர் திரு.தளவான் அவர்கள்  விடுமுறையில் இருந

தீயை அஞ்ச வைக்கும் தீரர்கள்.பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பாதுகாப்பு பயிற்ச்சி விழிப்புணர்நிகழ்ச்சி திருநெல்வேலிமாவட்டம்பாளையங்கோட்டை தீயணைப்பு துறை.

Image
தீயணைப்பு  துறை என்பது நமது மக்களுக்கு அதனுடைய அதிக   சப்தம் கொடுக்கும் அலாரம் சத்தமும், அதனுடைய சைரன்   சத்தமும் தான்,  ஞாபகத்திற்கு வரும். அதை வேடிக்கையாகவும் பலர்  பார்த்திருப்பர். பார்த்துக் கொண்டும்  இருப்பர்.               ஆனால் அந்த தீயணைப்பு வண்டியில் அமர்ந்திருக்கும் தீயணைப்பு வீரர்களின் மன நிலைமையை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. நம்மை அழைத்திருக்கும் இடத்திற்கு செல்வதற்குள் மிகப்பெரும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ அடைந்து விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு அந்த இடம் சென்று சேரும் வரை அவர்களுக்கு இருக்கும் மன வலியை யாரும் பங்கிட முடியாது.  குறிப்பிட்ட இடம் சென்று ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றி வரும் வரை அவர்கள் தம் குடும்பத்தை, குழந்தைகளைப் பற்றி  கவலைப்படாமல் உயிரைத் துச்சம் என மதித்து அந்தத் தீரச் செயலில் ஈடுபட்டு வெற்றியும் அடைவர். அந்த வெற்றி ஒன்றுதான் அவர்களுடைய குறிக்கோள் மற்றும் மகிழ்ச்சி எனக் கொள்ளலாம்.                  தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பொதுமக்களை காக்க, வேண்டும் என்ற ஒன்றையே தங்களது குறிக்கோளாக வைத்திருக்கும் நமது தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 544 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது காவல்குழுவினர் அதிரடி.

Image
  இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,IPSஅவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.  அதன் அடிப்படையில்  காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் திரு. தாமோதரன், அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. ஆறுமுகநயினார், திரு.ஜெயபிரகாஷ் மற்றும் காவலர்களுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகர் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த  மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப்@சத் ( 31), தாமஸ் (33) மற்றும் தாஜிதின்(42) ஆகிய 3 நபர்களையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு  கடத்திச் சென்ற 544 கிலோ எடை உள்ள  குட்கா பொருட்கள்,TATA AC-1 ,Omni-1 மற்றும்   இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல்  செய்து மேற்படி நபர்களைவழக்கு பதிவுசெய்து  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.  போதை பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அழித்து அவர்களின

திருச்செந்தூரில் கந்தசஷ்டி பெருவிழா கோலாகலமாக யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது

Image
 . திருச்செந்தூர்-அக்-25 தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் கந்தசஷ்டித்திருவிழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. அதனை முன்னிட்டு 24, மாலை யாக சாலை பூஜைகளை செய்யும் சிவாச்சார்யார் காப்பு கட்டிக்கொண்டார். பின்னர் 25 அதி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம்: தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 7, மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்கியது.  யாகசாலை பூஜைகளை நடத்தித் தருமாறு காப்புகட்டிய சிவாச்சார்யாரிடம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், கோவில் நிர்வாக அதிகாரி அன்புமணி ஆகியோர் தாம்பூலம் வழங்கினார்கள் பின்னர் யாக சாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜையில் பிரதான கும்பர் - 1/வள்ளி தெய்வானை-2, அம்பாள், பெருமாள், அஸ்திக்பாலகர்கள் என 51 கும்பங்கள் வைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. காலை 10-30 மணிக்கு யாகசாலையில் பூர்ணா கதி ஆகிய பின்னர் சுவாமி மற்றும் வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர் தீபாராதனை நடைபெற்ற பின்னர் சுவாமி மற்றும் வள்ளிதெய்வானை அம்மன் தங்கச் சப்பரத்த

முதல்வரின் போதைபொருள் இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரேவாரத்தில் 14 கஞ்சா குற்றவாளிகள் தண்டனைபெற குற்றபத்திரிகைதாக்கல் ACP.G.ஹரிக்குமாருக்கு காவல்அதிகாரிகள் பாராட்டு

Image
 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த போதை பொருள் இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் காவல்துறையினர் கஞ்சா குட்கா புகையிலை போன்ற போதை பொருள்களை பதுக்கி வைப்பவர்கள் மீதும் விற்பவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். காவல் ஆணையர்  திரு.சங்கர் ஜிவால் IPS                                          காவல் உதவி ஆணையர்  கோ.ஹரிகுமார்  இதன் அடிப்படையில் சென்னை பெருநகரில் பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS  அவர்கள் மற்றும் கூடுதல் காவல் ஆணையர் திரு.பிரேமானந்தா சிங்கா IPS   அவர்கள், JCP.  திரு.நாயர் IPS அவர்கள், கீழ்பாக் காவல் சரக துணை ஆணையர் திரு.கோபி அவர்கள், ஆகியோர் உத்தரவின்படி சென்னை பெருநகர வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் கோ.ஹரிகுமார் அவர்கள் கஞ்சா போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு ஒரே வாரத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் அடங்கிய 14 வழக்குகள் கையில் எடுத்து தீவிர புலன் விசாரணை செய்து கஞ்சா போதை பொருளை ஒழிக்க  (NDPS COURT)ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முறையாக நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தண்டன

தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில்நடைபெற்ற யோகா போட்டியில் தங்கபதக்கம் வென்ற காவலருக்கு SP.பாராட்டு.

Image
தூத்துக்குடிமாவட்டம்  காமராஜ் கல்லூரியில் ‘இன்டெர்நேஷனல் யூனியன் யோகா கூட்டமைப்பு மற்றும் சைன் யோகா பவர் அமைப்பு” சார்பாக மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு. இன்டெர்நேஷனல் யூனியன் யோகா கூட்டமைப்பு மற்றும் சைன் யோகா பவர் அமைப்பு சார்பாக   தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினருக்கு மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இந்த யோகா போட்டியில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். இதில் பொதுப்பிரிவினருக்கான யோகா போட்டியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை முதல் நிலை காவலர் திரு. ராஜலிங்கம் என்பவர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். மேற்படி மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற முதல் நிலை காவலர் திரு. ராஜலிங்கம் அவர்களை   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன்  அவர்கள் பாராட்டி மென்மேலும் வெற்றிக

தேவகோட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்காபுகையிலை பொருட்கள் 400 கிலோபறிமுதல் பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.

Image
   தமிழக அரசு அறிவித்துள்ள போதை பொருள்  இல்லா தமிஷழகம் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் தயாரிப்பவர் பதுக்கி வைத்திருப்பவர்கள் விற்பனை  செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  சிவகங்கைமாவட்டம் தேவகோட்டை நகரில் கஞ்சா குட் கா ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றி விசாரணை செய்ததில் இடையன் வயலை சேர்ந்த செந்தில் என்பவர் ஆர்.எஸ் மங்கலத்தில் உள்ள சையது இம்ரான் கான் என்பவரிடமிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Tr.செந்தில்குமார் அவர்கள் உத்தரவுப்படியும் தேவகோட்டை உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் Tr.கணேஷ்குமார் அவர்கள் மேற்பார்வையில் தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன் சண்முகவேல் மற்றும் காவலர்களுடன் தனிப்படையினர் ஆர் எஸ் மங்கலம் சென்று விசாரணை செய்ததில் தர்மர் கோவில் தெருவில் உள்ள சையது இம்ரான் கான் என்பவருக்கு சொந்தமான குடோனில்  புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.  அங்கு சென்று ப

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது தனிபடைகாவல்துறையினர் அதிரடி.

Image
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,IPS, அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில்  காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது  அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற கோவையை சேர்ந்த கணேஷ்@கணேசன்(35) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த   ஜெயகிஷோர்நாக் (41)  ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.150 கிலோ எடையுள்ள கஞ்சாவை மற்றும் இருசக்கர வாகனம்-1  பறிமுதல் செய்துவழக்குபதிவுசெய்து  மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாக போதை பொருட்களை பயன்படுத்தி அவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள். "வாழ்க்கை பாதையை மாற்றும் போதையின் பாதையில் செல்ல வேண்டாமே".... சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட

கோவை மாவட்டம்கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் பறிமுதல்.... விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது தனிபடை காவல்துறையினர் அதிரடி.

Image
  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,IPS, அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொருட்டு தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் .  கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ரயில்வே பாலத்தின் அடியில் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் திரு. திலக் மற்றும் திரு.குப்புராஜ் ஆகியோர்கள் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர்  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கு போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  முனியாண்டி என்பவரது மகன் ராம்குமார் (32) மற்றும்  ராஜ முகமது என்பவரது மகன் கிஷோர் அகமத் (32) ஆகிய இரண்டு நபர்களையும்  கைது செய்து, அவர்களிடமிருந்து இருந்து ரூ.3,75,000/- மதிப்புள்ள- 90 கிராம் எடையுள்ள (வணிக தர எடை) Methamphedamine crystal, LSD Stamp -17 மற்றும் MDMA-17 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள்போன்ற உயர் ரக போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். உயர் ரக போதைப் பொருட்களை

வாணியம்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனை செய்த கடைக்கு சீல். கடையின் உரிமையாளர் கைது. பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல்.

Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காதர் பேட்டையில் பகுதியில்உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் நகர போலீசாருக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது மொய்தீன் என்பவரின் கடையில் சோதனைசெய்த போது குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளர் மொய்தீன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிருபர்.முகம்மதுயூனுஸ்.

கோவை மாவட்டம்சூலூர் பகுதியில் 502 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்....விற்பனைக்கு கடத்தி வந்தவர்கள் கைது... காவல்துறையினரின் அதிரடி.SP.பாராட்டு

Image
இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,IPS அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில்  (12.10.2022) சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மாதையன், உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் சூலூர் செங்கோடகவுண்டன்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த TN 57 BK 6190 என்ற வாகனத்தை சோதனை செய்தபோது  நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தகணபத்ராம்(25), தினேஷ்(20),ஹைத்மத்ராம்(32), கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (27) மற்றும் சரவணகுமார் (47) ஆகிய 5 நபர்களையும் கைது செய்து அவர்கள் விற்பனைக்கு  வைத்திருந்த  502 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள்* மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். போதை பொருட்கள் இளைஞர்களி

திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன 14 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. மாவட்ட சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை.SP.பாராட்டு.

Image
  திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கிவரும்  சைபர்கிரைம் காவல் நிலையத்தில், இதுவரை காணாமல் போன 64 லட்சத்து 21 ஆயிரத்து 235 ரூபாய் மதிப்புள்ள 486 செல்போன்களை  மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுளளது.  மேலும் 12.10.2022 ம் தேதி ரூபாய் 14 இலட்சம்  மதிப்புள்ள 101 செல்போன்கள் மீட்கப்பட்டு  உரிய நபர்களிடம்   மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS. அவர்கள் ஒப்படைத்தார்கள்.  பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்‌ பேசுகையில்  இதுவரை மீட்கப்பட்ட 468  செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் இணைய வழி  மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாகவும் OTP பெற்றுக்கொண்டு பண மோசடி செய்யப்பட்ட புகார்களுக்கு, துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்றியவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி 2 இலட்சத்து 19 ஆயிரத்து 852 ரூபாய்* பாதிக்கப்பட்ட நபர்களுக்கு  திரும்ப பெற்று  கொடுக்கப்பட்டுள்ளது.  இதுவரை இணையவழியாக மோசடி செய்ததாக பெறப்பட்ட புகார் மீது விசாரணை மேற்கொண்டு 92 இலட்சத்து 99 ஆயிரத்து 167 ரூபாய் எதிரிகளின் வங்கி கணக்கில்  முடக

கோவை மாவட்டம் கொள்ளையடிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர்...

Image
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த 07.10.2022 -ஆம் தேதி  வயதான மூதாட்டியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அம்மூதாட்டியின் கை மற்றும் கால்களை கட்டி போட்டு, வீட்டில் இருந்த 9 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  இது சம்மந்தமாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன்,IPS, அவர்கள் உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்களின் மேற்பார்வையில்,  காவல் ஆய்வாளர் திரு.தாமோதரன் தலைமையில்,  உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர்  சசிகுமார், தலைமை காவலர் மகேந்திரன் மற்றும் காவலர் சதீஷ்குமார் ஆகியோர்களை கொண்டு  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக  வாகன தணிக்கை செய்தும், சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும்  48 மணி நேரத்தில்  குற்றவாளிகளான சின்ன

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் IPS முன்னிலையில் 845 கிலோ கஞ்சா அழிப்பு.

Image
  செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அருகிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,IPS முன்னிலையில் சென்னை பெருநகர காவல்துறையினரால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கெட்டமைன் போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டது.இதன் மதிப்பு 1 கோடியே 50 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.       இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கஞ்சா மற்றும் போதை பொருள் நீதிமன்ற உத்தரவின் படி  இங்கு அழிக்கப்பட்டது.  மேலும் 700 கிலோ போதை பொருட்கள்  நீதிமன்ற உத்தரவுக்குபின் அழிக்கப்பட உள்ளதாகவும்,மேலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 592 வழக்குகளில் 908 பேர் கைது செய்யப்பட்டு 1526 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி 24 போதை மாத்திரைகள்  வழக்குகளில் 62 பேர் கைது செய்யப்பட்டு 42,000 மேற்பட்ட மாத்திரைகள்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும

தூத்துக்குடிமாவட்டத்தில்சூரங்குடி காவல் நிலைய எல்லைபகுதியில் கஞ்சாகடத்தியவர்களைமடக்கி பிடித்தகாவல்துறையினர் SP.Dr.L.பாலாஜிசரவணன் பாராட்டு

Image
 தூத்துக்குடிமாவட்டத்தில்சூரங்குடி காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 460 கிலோ கஞ்சா மற்றும் 240 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் - கஞ்சா, மண்ணெண்ணெய் மற்றும் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.. L. பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. லோகேஸ்வரன் தலைமையில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. இளவரசு, உதவி ஆய்வாளர் திரு. சண்முகவேல், தனிப்பிரிவு காவலர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் குளத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. பிரபாகரன் ஆகியோர் அடங்கிய போலீசார்  சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லாக்குளம் பகுதியில் ரோந்து மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த TN 69 AD 2630 (Bolero Pickup Van) மற்றும் TN 48 BY 3753 (Eicher Van) என்ற 2 சரக்கு வாகனங்களை சோதனை செய்தத

திருச்சி மாநகர எ.புதூர்பகுதிகளில்கஞ்சா,குட்கா போதை பொருள் விற்பனைசெய்பவர்கள்மீதுகடும்நடவடிக்கை காவல்ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அதிரடி

Image
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்IPS அவர்கள் உத்தரவுபடி திருச்சி மாநகரத்தில் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற  அறிவுரைபடி திருச்சி மாநகர காவல்கன்டோன்மென்ட்சரக காவல்உதவிஆணையர் ஆணையர் திரு.அஜய்தங்கம் அவர்களுடைய அறிவுரையின் படியும் காவல்ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தீவிரநடவடிக்கையால் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லக்குட்ப்பட்ட பகுதிகளில்  பெரிய கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவசுப்பிரமணி என்ற குரு என்ற உடுக்கை குரு பஞ்சபூர்  பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து கஞ்சா சுமார் 3 கிலோ 400 கிராம் மற்றும்  அவர்  பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குபதிவுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். பொதுமக்கள் யாரேனும் போதை பொருள்கள்  சம்பந்தமாக தகவல் தர வேண்டும் என்றால் 9498196067,9498100627 என்ற நன்பருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தரிவித்தார் மேலும் போதைபொருள்ஒழிப்புநடவடிக்கையில் தீவிரமாகசெயலாற்றிவருகி

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை IPS அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர்தீவிரபோதைபொருள் ஒழிப்புநடவடிக்கை

Image
 ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை IPS அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர்தீவிர போதைபொருள் தடுப்புநடவடிக்கையில் திருவாடானை சரக DSP. நிரேஷ்பழனிவேல் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தொண்டி ஆய்வாளர் பொறுப்பு நவநீதகிருஷ்ணன்தலைமையில் திருவாடானை சரகத்திற்குஉட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை வஸ்துக்கள் மற்றும் கஞ்சா கடத்துபவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் இதன் அடிப்படையில் தொண்டி தனிப்பிரிவு தலைமை காவலர் துரை அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சரகம் தொண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மம்மலக்கரை  கிராமத்தில் கம்மாக்கரை ஏரியாவில்காவல்துறையினரிடம் ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா பிடிபட்டது இதை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை IPS தொண்டிக்கு நேரடியாக வந்து பிடிபட்ட கஞ்சா பார்சல்களை பார்வையிட்டு தலைமை காவலரை பாராட்டினர் மேலும் திருவாடானை சரகDSP நிரேஷ்பழனிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அவர்களும் தலைமை காவலருக்கு பாராட்டு தெரிவித்தனர். Reporter.Sivagurunathan.

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.

Image
திருச்சி புனிதஜேம்ஸ்மெட்ரிக்குலேஷன் பள்ளிவளாகத்தில் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ்குழுமம்சார்பில்நடைப்பெற்றகாந்திஜெயந்திவிழாவில் தமிழ்நாடு ஏரோஸ்கட்டோபால் அசோசியேஷன், கோடக் மகேந்திரா பேங்க் குழுமும்இணைந்து பள்ளி மாணவர்களின் தமிழ் ஆற்றலை வளர்க்கச் செய்யும், நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் காலை முதல் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு)V.அன்பு,  திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் திரு.அஜய்தங்கம் (கண்டோன்மென்ட் சரகம்), திருச்சி மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஜோசப்நிக்சன், திருச்சிமாவட்ட திருவெறும்பூர் சரக துணைகாவல்கண்காணிப்பாளர்(DSP) திரு.அறிவழகன்    திருச்சிமாநகரகால்குழந்தைகடத்தல்தடுப்புபிரிவு ஆய்வாளர் திருமதி.அஜீம், திருச்சிமாநகரகாவல் கன்