திருச்செந்தூரில் கந்தசஷ்டி பெருவிழா கோலாகலமாக யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது

 .


திருச்செந்தூர்-அக்-25

தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் கந்தசஷ்டித்திருவிழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. அதனை முன்னிட்டு 24, மாலை யாக சாலை பூஜைகளை செய்யும் சிவாச்சார்யார் காப்பு கட்டிக்கொண்டார். பின்னர் 25 அதி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம்: தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 7, மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்கியது. 

யாகசாலை பூஜைகளை நடத்தித் தருமாறு காப்புகட்டிய சிவாச்சார்யாரிடம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், கோவில் நிர்வாக அதிகாரி அன்புமணி ஆகியோர் தாம்பூலம் வழங்கினார்கள் பின்னர் யாக சாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜையில் பிரதான கும்பர் - 1/வள்ளி தெய்வானை-2, அம்பாள், பெருமாள், அஸ்திக்பாலகர்கள் என 51 கும்பங்கள் வைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. காலை 10-30 மணிக்கு யாகசாலையில் பூர்ணா கதி ஆகிய பின்னர் சுவாமி மற்றும் வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர் தீபாராதனை நடைபெற்ற பின்னர் சுவாமி மற்றும் வள்ளிதெய்வானை அம்மன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களின் வாள் வகுப்பு, வீர வேல்வகுப்பு முழங்க பஞ்சவாத்யம், மேளதாளம் முழங்கசுவாமி உள்பிரகாரம் சுற்றி வந்து சண்முக விலாச மண்டபம் வந்துசேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சோடஷ தீபாராதனை நடைபெற்று ஆறு தட்டு தீபாராதனை நடைபெற்றது.





பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுசுவாமி தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் அதிகாலை 1 மணிக்கு கடலில் நீராடி தூண்டுகை விநாயகரை வணங்கி விரதத்தை கடைபிடித்தனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக சண்முக விலாச மண்டபத்தில் இருந்து அங்க பிரதட்சணம் தொடங்கி நான்கு கிரிவீதியிலும் சுற்றி வந்தனர். பெண்கள் குழந்தை வரம் வேண்டி கோவிலை சுற்றி அடிப் பிரதட்சணம் செய்தனர். சில பக்தர்கள் மெளன விரதம் இருந்தனர். பக்தர்கள் கோவிலை சுற்றி குழுக்களாக முருகன் திருநாமத்தை ஆடல் பாடல் வாயிலாக ஆடி, பாடிவந்தனர். கந்த சஷ்டி திருவிழா 25.10.22 அன்று தொடங்கி 30.10.22 அன்று வரை ஆறுநாட்கள் நடைபெறுகின்றது. 30.10.22 அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகின்றது. தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி தங்கத் தேர் கிரிவீதிஉலா நடைபெறுகின்றது.

விழாவிற்காண ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் செந்தில்ராஜ் IAS, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன், கோவில் நிர்வாக அதிகாரி அன்புமணி, ஆகியோர் செய்து வருகின்றனர்.

நிருபர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.