கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது தனிபடைகாவல்துறையினர் அதிரடி.


சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,IPS, அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில்  காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது  அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற கோவையை சேர்ந்த கணேஷ்@கணேசன்(35) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 

 ஜெயகிஷோர்நாக் (41)  ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.150 கிலோ எடையுள்ள கஞ்சாவை மற்றும் இருசக்கர வாகனம்-1  பறிமுதல் செய்துவழக்குபதிவுசெய்து  மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாக போதை பொருட்களை பயன்படுத்தி அவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள். "வாழ்க்கை பாதையை மாற்றும் போதையின் பாதையில் செல்ல வேண்டாமே"....

சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.