தனிநபர்களுக்கு கடன் தருவதாக கூறி போன் மூலம் ரூ.2,03,100/- ஏமாற்றிய நபர்களை டெல்லிக்கு சென்று 5,பேரைகைதுசெய்த புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைபட்டினத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் கனிக்குமார் கடந்த 02-07-22 அன்று 1% வட்டியில் தனிநபர் கடன் தருவதாக தனக்கு SMS வந்ததாகவும் அன்றே அதிலிருந்த 7509100763 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசி அவர்களிடம் தனக்கு ரூ.5,00,000/- கடன் வேண்டும் என்று கூறிய பிறகு 8964033940. 8964049091 ஆகிய எண்களிலிருந்து தொடர்பு கொண்டு கனிகுமாரிடம் பேசியதாகவும். மீண்டும் தனலட்சுமி பைனான்ஸில் இருந்து பேசுவதாக 7089759101, 8527396634, 9650921807 என்ற எண்களிலிருந்து வாதியிடம் பேசி ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் போட்டோ போன்ற ஆவணங்களை அவரது வாட்ஸ்அப் எண்-7509100763 ற்கு அனுப்ப சொன்னதன் அடிப்படையில் அனுப்பியதாகவும். 


பின்பு அவர்கள் வாதியை தொடர்பு கொண்டு Document charge, Insurance லோன் Amount, கணக்கில்வரவு வைக்க DD எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு காரணங்களை கூறி பணம் கட்ட சொன்னதால் கனிகுமார், அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு  மொத்தம் ரூ.2,03,100/- தொகை அனுப்பி ஏமாந்துவிட்டதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே IPS அவர்களின் உத்தரவுப்படியும். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ்கிருஷ்ணன் , சைபர் கிரைம் பிரிவு அவர்களின் வழிநடத்துதலின் படியும், 

காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் மொபைல் எண்களை ஆய்வு செய்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் எதிரிகள் டெல்லியை சேர்ந்த ரகுபதி, முகமது எஸ்தாக், முகமது சாபி ஆலம், பாலாஜி மற்றும் பிரியா ஆகியோர்கள் மேற்படி குற்ற வழக்கில் ஈடுபட்டிருந்ததும் மேலும், இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பலரை டெல்லியிலிருந்து கொண்டு ஏமாற்றிவருவதும் தெரியவந்தது. 

மேற்படி குற்றவாளிகள் சைபர் குற்ற பிரிவு போலீசாரால் டெல்லியில் 15.10.2022ஆம் தேதியன்று அதிரடியாக கைது செய்யப்பட்டு தக்க வழிக்காவலுடன்காவல் நிலையத்தில் அறிக்கை செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். டெல்லிக்கு சென்று எதிரிகளை கைது செய்த தனிப்படை சைபர் கிரைம் காவல்துறையினரின் பணியினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக வரவழைத்து  சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்கள்.

என்றும் மக்கள்நிருபர்ஷாஜதா. நலனிற்கும் பாதுகாப்பிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை.

நிருபர்.ஷாஜதா

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.