சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் IPS முன்னிலையில் 845 கிலோ கஞ்சா அழிப்பு.


 

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அருகிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,IPS முன்னிலையில் சென்னை பெருநகர காவல்துறையினரால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கெட்டமைன் போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டது.இதன் மதிப்பு 1 கோடியே 50 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கஞ்சா மற்றும் போதை பொருள் நீதிமன்ற உத்தரவின் படி  இங்கு அழிக்கப்பட்டது. 


மேலும் 700 கிலோ போதை பொருட்கள்  நீதிமன்ற உத்தரவுக்குபின் அழிக்கப்பட உள்ளதாகவும்,மேலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 592 வழக்குகளில் 908 பேர் கைது செய்யப்பட்டு 1526 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி 24 போதை மாத்திரைகள்  வழக்குகளில் 62 பேர் கைது செய்யப்பட்டு 42,000 மேற்பட்ட மாத்திரைகள்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 மடங்கு அதிகம் எனவும்.இதுவரை  கஞ்சா  4.87கோடி ரூபாய், கெட்டமைன் 2.கோடியே 88 லட்சம்,55. லட்சம்  மதிப்பு உள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

இந்த ஆண்டில் 350 பேரின் வங்கி கணக்கில் முடக்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவதுடன்,அவர் வேறு வங்கி கணக்கு தொடங்குவதற்கு தடையாக அமையும் என தெரிவித்தார்.

 இந்நிகழ்வில்  வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதிIPS,மத்திய குற்றபிரிவு துணை ஆணையர் நாகஜோதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 சிறப்பு நிருபர் .அந்தோணி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.