தூத்துக்குடிமாவட்டத்தில்சூரங்குடி காவல் நிலைய எல்லைபகுதியில் கஞ்சாகடத்தியவர்களைமடக்கி பிடித்தகாவல்துறையினர் SP.Dr.L.பாலாஜிசரவணன் பாராட்டு


 தூத்துக்குடிமாவட்டத்தில்சூரங்குடி காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 460 கிலோ கஞ்சா மற்றும் 240 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் - கஞ்சா, மண்ணெண்ணெய் மற்றும் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.. L. பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. லோகேஸ்வரன் தலைமையில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. இளவரசு, உதவி ஆய்வாளர் திரு. சண்முகவேல், தனிப்பிரிவு காவலர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் குளத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. பிரபாகரன் ஆகியோர் அடங்கிய போலீசார்  சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லாக்குளம் பகுதியில் ரோந்து மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த TN 69 AD 2630 (Bolero Pickup Van) மற்றும் TN 48 BY 3753 (Eicher Van) என்ற 2 சரக்கு வாகனங்களை சோதனை செய்ததில் அதில் கஞ்சா மற்றும் மண்ணெண்ணெய் இருப்பதும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் அந்த சரக்கு வாகனங்களில் 18 மூட்டைகளில் இருந்த 460 கிலோ கஞ்சா, 6 கேன்களில் இருந்த 240 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.*

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. லோகேஸ்வரன் அவர்களிடம் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிருபர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.