தேவகோட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்காபுகையிலை பொருட்கள் 400 கிலோபறிமுதல் பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.

  

தமிழக அரசு அறிவித்துள்ள போதை பொருள்  இல்லா தமிஷழகம் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் தயாரிப்பவர் பதுக்கி வைத்திருப்பவர்கள் விற்பனை  செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

சிவகங்கைமாவட்டம் தேவகோட்டை நகரில் கஞ்சா குட் கா ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றி விசாரணை செய்ததில் இடையன் வயலை சேர்ந்த செந்தில் என்பவர் ஆர்.எஸ் மங்கலத்தில் உள்ள சையது இம்ரான் கான் என்பவரிடமிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Tr.செந்தில்குமார் அவர்கள் உத்தரவுப்படியும் தேவகோட்டை உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் Tr.கணேஷ்குமார் அவர்கள் மேற்பார்வையில் தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன் சண்முகவேல் மற்றும் காவலர்களுடன் தனிப்படையினர் ஆர் எஸ் மங்கலம் சென்று விசாரணை செய்ததில் தர்மர் கோவில் தெருவில் உள்ள சையது இம்ரான் கான் என்பவருக்கு சொந்தமான குடோனில்  புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

 அங்கு சென்று பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்த சையது இம்ரான் கான் அவருக்கு உடந்தையாக இருந்த வாசு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திகேயன் ராசு மற்றும் தேவகோட்டையில் புகையிலைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த செந்தில், முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சுமார் 400 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்க்கொண்டனர்.

நிருபர்.சிவகுருநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.