கோவை மாவட்டம்கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் பறிமுதல்.... விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது தனிபடை காவல்துறையினர் அதிரடி.

 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,IPS, அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொருட்டு தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் .

 கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ரயில்வே பாலத்தின் அடியில் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் திரு. திலக் மற்றும் திரு.குப்புராஜ் ஆகியோர்கள் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர்  விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கு போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  முனியாண்டி என்பவரது மகன் ராம்குமார் (32) மற்றும்  ராஜ முகமது என்பவரது மகன் கிஷோர் அகமத் (32) ஆகிய இரண்டு நபர்களையும்  கைது செய்து, அவர்களிடமிருந்து இருந்து ரூ.3,75,000/- மதிப்புள்ள- 90 கிராம் எடையுள்ள (வணிக தர எடை) Methamphedamine crystal, LSD Stamp -17 மற்றும் MDMA-17 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள்போன்ற உயர் ரக போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

உயர் ரக போதைப் பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். "போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு" என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் எச்சரித்துள்ளார்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.