தீயை அஞ்ச வைக்கும் தீரர்கள்.பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு பாதுகாப்பு பயிற்ச்சி விழிப்புணர்நிகழ்ச்சி திருநெல்வேலிமாவட்டம்பாளையங்கோட்டை தீயணைப்பு துறை.


தீயணைப்பு  துறை என்பது நமது மக்களுக்கு அதனுடைய அதிக   சப்தம் கொடுக்கும் அலாரம் சத்தமும், அதனுடைய சைரன்   சத்தமும் தான்,  ஞாபகத்திற்கு வரும். அதை வேடிக்கையாகவும் பலர்  பார்த்திருப்பர். பார்த்துக் கொண்டும்  இருப்பர்.

            


 ஆனால் அந்த தீயணைப்பு வண்டியில் அமர்ந்திருக்கும் தீயணைப்பு வீரர்களின் மன நிலைமையை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. நம்மை அழைத்திருக்கும் இடத்திற்கு செல்வதற்குள் மிகப்பெரும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ அடைந்து விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு அந்த இடம் சென்று சேரும் வரை அவர்களுக்கு இருக்கும் மன வலியை யாரும் பங்கிட முடியாது.  குறிப்பிட்ட இடம் சென்று ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றி வரும் வரை அவர்கள் தம் குடும்பத்தை, குழந்தைகளைப் பற்றி  கவலைப்படாமல் உயிரைத் துச்சம் என மதித்து அந்தத் தீரச் செயலில் ஈடுபட்டு வெற்றியும் அடைவர். அந்த வெற்றி ஒன்றுதான் அவர்களுடைய குறிக்கோள் மற்றும் மகிழ்ச்சி எனக் கொள்ளலாம்.

                 தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பொதுமக்களை காக்க, வேண்டும் என்ற ஒன்றையே தங்களது குறிக்கோளாக வைத்திருக்கும் நமது தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறையின்  சேவைகள் பாராட்டப்பட்டு பொது மக்களிடம் நற்பெயரை பெற்று வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது.


        மேலும் பொது மக்களின் விழிப்புணர்வுக்காக தேசிய பேரிடர் தினமான அக்டோபர் 13 அன்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் பாளையங்கோட்டை சார்பாக, பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள  மேக்தலின் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் ஒத்திகை பயிற்சி மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது. இதில் இடர்பாடு ஏற்படும் நேரங்களில் மாணவ மாணவிகள் எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எவ்வாறு திறந்த வெளியில் வரவேண்டும் என்பது பற்றியும் முதலுதவி  தேடுதல் பணி, மீட்பு பணி போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கு ஒத்திகை  பயிற்சியாக   அளிக்கப்பட்டது. தீ விபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

     அதேபோல்  பாளையங்கோட்டை சாரா தக்கர் பெண்கள் கலை கல்லூரியில் விபத்து இல்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. கணேசன், அவர்கள் உரையாற்றி பட்டாசுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றியும், பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிக்க செய்ய வேண்டும் என்பது பற்றியும், தீக்காயம் பட்டால் அதிலிருந்து நம்மை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், விரிவாக எடுத்துரைத்தார்.

               


இதற்கு  மேலாக அவர்கள் ஈடுபட்ட ஒரு தீர செயல் பருத்திப்பாடு என்ற ஊர் அருகே உள்ள மகிழ்ச்சி புரம் என்ற இடத்தில்  ஆசீர் என்பவர் நுங்கு வெட்டுவதற்காக 60 அடி உயரமுள்ள பனை மரத்தில் ஏறி இருக்கிறார். பனை மரத்தில் ஏறியவருக்கு திடீரென தசை பிடிப்பு மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார்.  உடனடியாக அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திரு.கணேசன் அவர்கள், மற்றும் உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் அவர்கள், ஆலோசனையின் படி நிலைய அலுவலர் ராஜா அவர்கள் தலைமையில் சென்ற வீரர்கள் மேலே மரத்தில் சிக்கியிருந்த ஆசீர் என்பவரை கயிறு  மூலம் உயிருடன் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது. 

      இது போன்ற வீரதீரச் செயல்களை செய்து வரும் இந்த வீரர்களை வீரர்கள் என்று சொல்வதை விட தீரர்கள்என இந்தத தீரர்களுக்கு,நமது போலீஸ் பார்வை சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு அவர்கள் மேன்மேலும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறோம்.

தலைமைநிருபர் S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.