முதல்வரின் போதைபொருள் இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரேவாரத்தில் 14 கஞ்சா குற்றவாளிகள் தண்டனைபெற குற்றபத்திரிகைதாக்கல் ACP.G.ஹரிக்குமாருக்கு காவல்அதிகாரிகள் பாராட்டு



 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த போதை பொருள் இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் காவல்துறையினர் கஞ்சா குட்கா புகையிலை போன்ற போதை பொருள்களை பதுக்கி வைப்பவர்கள் மீதும் விற்பவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.



காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS

                                         காவல் உதவி ஆணையர்  கோ.ஹரிகுமார்

 இதன் அடிப்படையில் சென்னை பெருநகரில் பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் IPS  அவர்கள் மற்றும் கூடுதல் காவல் ஆணையர் திரு.பிரேமானந்தா சிங்கா IPS   அவர்கள், JCP.  திரு.நாயர் IPS அவர்கள், கீழ்பாக் காவல் சரக துணை ஆணையர் திரு.கோபி அவர்கள், ஆகியோர் உத்தரவின்படி சென்னை பெருநகர வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் கோ.ஹரிகுமார் அவர்கள் கஞ்சா போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு ஒரே வாரத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் அடங்கிய 14 வழக்குகள் கையில் எடுத்து தீவிர புலன் விசாரணை செய்து கஞ்சா போதை பொருளை ஒழிக்க  (NDPS COURT)ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முறையாக நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தண்டனை பெற ஆவனைசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பாராட்டுக்குரியது 

வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் கோ. ஹரிகுமார் அவர்களின் இந்த துரித நடவடிக்கை செயலை  மேற்கண்ட காவல் உயர் அதிகாரிகள்  பாராட்டி கீழ்பாக் சரக காவல் துணைஆணையர் திரு.கோபி அவர்கள் பணவெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

 முதல்வர் உத்தரவின் பெயரில் சென்னை பெருநகரில் உயர் காவல் அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி கஞ்சா போதை பொருட்களை ஒழிக்க தீவிரமாக செயல்பட்டு ஒரே வாரத்தில் 14 வழக்குகளில்  (NDPS COURT) நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகள் தண்டனை பெற ஆவனை செய்துள்ளார் காவல் உதவி ஆணையர் கோ. ஹரிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது 

நிருபர். ச்சந்தன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.