வாணியம்பாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனை செய்த கடைக்கு சீல். கடையின் உரிமையாளர் கைது. பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காதர் பேட்டையில் பகுதியில்உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் நகர போலீசாருக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது மொய்தீன் என்பவரின் கடையில் சோதனைசெய்த போது குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளர்

மொய்தீன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிருபர்.முகம்மதுயூனுஸ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.