Posts

Showing posts from February, 2023

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை

Image
  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் தலைமையில் வங்கி மேலாளர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் வங்கி ஏ.டி.எம் பாதுகாப்புக் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  இக்கூட்டத்தில் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் பாதுகாப்பு காவலர்களை நியமித்தல், பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள் நிறுவுதல், கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஏ.டி.எம் இயத்திரத்தை உடைக்கும் பட்சத்தில் வங்கியில் மட்டும் அலாரம் ஒலி எழுப்புவது மட்டுமில்லாமல் அருகில்  உள்ள காவல்நிலையத்திலும் அலாரம் ஒலி எழுப்ப வழிவகை செய்தல், காவல்துறையினரின் தொடர்பு எண்ணை தெரிந்துவைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 150 க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.வினோத் சாந்தாராம், திரு.சந்திரசேகர், திரு.பாலகுமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜூலியஸ் சீசர் மற்றும் திரு. சுனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.  சிறப்பு நிருபர்.ம.சசி

ஈமுகோழி மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்று தந்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் காவல்குழுவினருக்குDGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.பாராட்டு.

Image
ஈரோடு பெருந்துறை, குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகைதிரும்ப கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பல முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. இது சம்பந்தமாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 2012 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவையில் 306 முதலீட்டாளர்களிடம் ரூ.5,65,83,840/- மற்றும் ஈரோட்டில் 829 முதலீட்டாளர்களிடம் ரூ.26,58,32,570/- ஏமாற்றப்பட்டதற்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவழக்குகளிலும் 18.02.2023 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேற்படி தீர்ப்பில் இரண்டு வழக்குகளிலும் எதிரிகள் மயில்சாமி மற்றும் சக்திவேல் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கோயம்புத்தூர் வழக்கில் ரூ.5,68,48,000/- அபராதமும், ஈரோடு வழக்கில் ரூ.28,72,32,000/- அபராதமும் வழங்கப்பட்டது. அபராதத் தொகைகளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. இவ்வழக்கை திறம்பட

திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

Image
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. காலை இரண்டு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 3 மணிக்கு யானைமீது கொடிப் பட்டம் வைக்கப்பட்டு மேளதாளத்துடன் ஊர் சுற்றி பின்னர் கோவில் வந்துசேர்ந்தது. கோவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடிமரத்தில் சிவாச்சார்யார்கள் கொடி ஏற்றிவைத்தனர்.  பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பைப் புல் மற்றும் வண்ண மலர்கள் பட்டு பரிவட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்திரி சுதந்திர பிராமணர்கள் பஞ்சாங்கம், அத்யானம், கட்டியம், வேதபாராயணம் முழங்க மேளதாளம் பஞ்சவாத்தியங்கள் முழங்க த16 வகையான சோடஷ தீபாராதனை நடைபெற்றது பக்தர்கள் திரளாககலந்துக் கொண்டுபக்திபரவசத்துடன் வழிபாடுசெய்தனர்  திருவிழா 12 நாள்கள் நடைபெறும் ஒவ்வொரு நாள் காலை, இரவு சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகின்றனர். நிருபர்.அய்யப்பன்

அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Image
 அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற 66 -வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் 23.02.2023- ம் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை  சந்தித்து பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் DGP.Dr.C. சைலேந்திரபாபு, IPS.அவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். துணைஆசிரியர்.V.பிரபு

சென்னை ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் செல்போன் திருடர்கள் கைதுதிருமுல்லைவாயில் T10 காவல்துறையினர் அதிரடி.

Image
  சென்னை ஆவடி  திருமுல்லைவாயில் T 10 காவல்நிலையத்திற்கு ட் ப் ப ட்ட  திருமுல்லைவாயில் அம்பத்துர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் நடந்து செல்வோர் மற்றும்  ஆள்நடமாட்டம். இல்லாத பகுதிகளில் அதிகளவில் செல்போன்களை பறித்து விட்டு அதிரடியாக இருசக்கர வாகனம் மூலம்  தப்பித்து விடுவதாக  புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து  அவர்களின் உத்தரவின் படி  காவல் ஆய்வாளர் குற்றப்பிரிவு திரு.கிருஷ்ணகுமார்மற்றும் தலைமைக் காவலர் சார்லஸ்   அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு விசாரணைகள் மேற்கொண்டதில்   அஜுத் என்கிற அஐய் வயது  26, S/o, கிருஷ்ணா அம்பத்துர் மற்றும்  சந்தோஷ்குமார் வயது 19, S/o, சரவணன் அம்பத்துர் ஆகிய இரு  குற்றவாளிகள் அம்பத்தூரில்  அதிரடி யாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து உரியவிசாரணைகள் செய்ததில்  குற்றவாளிகள் தங்களது குற்றத்தை ஒத்து கொண்டனர் மேலும் மேற்படி குற்றவாளிகளிடமிருந்து   18-செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் T10 திருமுல்லைவாயில் காவல் துறையினர் தெர

கன்யாகுமரிமாவட்டம் பெண்கள் பாதுகாப்புக்கு என்று தனி பெண் போலீஸ் அதிவிரைவுப் படை(Striking Force)உருவாக்கம். SP.D.N.ஹரிகிரன்பிரசாத் IPS அதிரடி

Image
 . கன்யாகுமரிமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக முழுக்க பெண் போலீஸ் அதிகாரி, பெண் காவலர்கள் அடங்கிய அதிவிரைவுப்படை(Striking Force) ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப்படையானது பெண்கள் கூடும் இடங்களில் ஈவ்டீசிங் போன்ற பிரச்சனைகள் நடைபெறாமல் தடுக்கவும், செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும்,பெண்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது பாதுகாப்பு அலுவலுக்கும் ஈடுபடுத்தபடுவார்கள்.   இந்த பெண்கள் அதிரடிப்படையானது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும். நிருபர்.ஜெயவேல்முருகன்.

சிவகங்கைமாவட்டம் இணையத்தில் மோசடிசெய்த 10.லட்சம்பணத்தை மீட்டு உரியவரிடம்ஒப்படைத்த SP.S. செல்வராஜ்

Image
  .இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 10,00,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச. செல்வராஜ்., அவர்கள்  நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, வைகை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (32) என்பவரின் வங்கி கணக்கில் தொலைபேசி எண் மாற்றம் செய்து ரூபாய் 10,00,000/-(லட்சம்) பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்நிலையில் கோடீஸ்வரன் பணத்தை மீட்டுத்தருமாறு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ்., அவர்களிடம் மனு அளித்தார்.  மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. தேவி அவர்கள், தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக கோடீஸ்வரன் என்பவருடைய ரூபாய் 10,00,000/- பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ்., அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம்   மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 10,00,000/- பணத்தை  உரிமை

தூத்துக்குடி திருச்செந்தூர் மீனவமக்க்ள் கடலில் தமிழக அரசைகண்டித்து மனிதசங்கிலிபோராட்டம்.

Image
  தூத்துக்குடி திருச்செந்தூர் மீனவமக்க்ள் தமிழக அரசைகண்டித்து மனிதசங்கிலிபோராட்டம். திருச்செந்தூரில் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக்கோரி கடலில் மனிதசங்கிலி போராட்டம் அமலிநகரில் அரசு மானிய கோரிக்கையில் ரூபாய் 83 கோடி ஒதுக்கீடு செய்தும் இதுவரை தூண்டில் பாலம் அமைக்காததை கண்டித்து மீனவ மக்கள் 21.2.23 அன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இரண்டாம் நாள் போராட்டமாக ஊர் மக்கள் அனைவரும் கடற்கரையில் ஒன்றுகூடி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2500 க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கலந்துகொண்டனர். காலை 9.30 மணிக்கு துவங்கிய மனித சங்கிலி போராட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. அமலிநகரில் போலிஸார் குவிக்கபட்ட இருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் ஒரு ஆண் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நிருபர்.அய்யப்பன்.

திருச்சிமாநகரில் பல்வேறு கொலைகொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு.

Image
   திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடுதிருச்சி குழுமாயி அம்மன் கோயில் அருகே இரு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரை,சோமு, ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்...  இதில் காவல்துறையை சார்ந்த மூன்று காவலர்கள் காயம் அடைந்துள்ளனர்.காயமடைந்த ரவுடிகள் திருச்சிஅரசுபெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர் மேலும் காவல் வாகனம் வயல் பள்ள த்தில் இறங்கியதாலும் துப்பாக்கி ச்சூடுசம்பவத்தால் காயமடைந்த காவலர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருக ன்றனர். அவர்களிடமிருந்து அருவா போன்றபயங்கர ஆயுதங்கள் காவல்துறையினர் கைப்பற்றிஉள்ளனர் இச்சம்பவம்குறித்து காவல்துறையினர் தீவிரவிசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர். சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

தூத்துக்குடிமாவட்டம் திருசசசதூர் அமலிநகரில் தூண்டில்பாலம் அமைக்கக் கோரி மீனவாகள் காலவரையரையற்ற போராட்டம்.

Image
திருச்செந்தூர் அமலிநகர் மீவை கிராமத்தில் தூண்டி பாலம் அமைக்கக்கோரி மீனவ கிராம மக்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருச்செந்தூர் அருகேயுள்ள மீனவ கிராமங்களாகிய வீர பாண்டியன்பட்டிணம், மணப்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இதேபோல் அமலிநகர் மீனவ கிராமத்திலும் தூண்டில் பாலம் அமைக்க வேண்டுமென மீனவ மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை அரசு ஏற்று சட்டசபையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையில் ரூ 83 கோடி செலவில் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால் இதுவரை தூண்டில் பாலம் அமைக்க எந்தவித பணியும் நடைபெறவில்லை.மீனவ மக்கள் இதுகுறித்து அரசு அதிகாரிகள், தொகுதி அமைச்சர், தொகுதி எம்.பி ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இதுவரை எந்த பணியும் நடைபெறாததால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் காலவரையரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். முதல்நாளில் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் கருப்புக் கொடிகட்டி கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூண்டில் பாலம் பணி நடைபெறும்வரை போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் ஊர்நலக்கமிட்டி மற

கோவை மாவட்டம்பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்கும் வகையில் லைப் கார்ட்ஸ் என்ற திட்டத்தை துவக்கி வைத்த மாவட்ட SP.பத்ரிநாராயணன் IPS.

Image
  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றில் கவனக்குறைவாக நீராடுபவர்களில் பலர் ஆற்றின் சுழலில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர்.  இது போன்ற உயிரிழப்புகளை  தவிர்க்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், IPS அவர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்  லைப் கார்ட்ஸ் என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தக் குழுவில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி பெற்ற 10 காவலர்கள்  கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் பவானி ஆற்றங்கரை ஓரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அவர்கள் பவானி ஆறு மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்தும்,  ஆற்றில் நீராடுபவர்கள் வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இத்துவக்க விழாவில் மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி., அவர்கள் மற்றும் காவல் துறையினர், பவானி ஆற்றங்கரையோரம் உள்ள ஊரா

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Image
  முசிறி காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில்குமார், உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ், தலைமை காவலர் திரு.மகாமுனி மற்றும் காவலர் திரு. ஆனந்தராஜ் ஆகியோர்  DGP. அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr. C.சைலேந்திர பாபு, IPS அவர்களை நேரில் சந்தித்து விருதினை காண்பித்துவாழ்த்துப்பெற்றனர். அவர்களை காவல்துறை DGP. அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.  காவல்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சங்கர்,IPS. அவர்கள் உடன் இருந்தார். முதன்மைஆசிரியர்.K.ராம்சுரேஷ்.

ஓசூரில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Image
  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்பா என்ற பெயரில் புற்றீசல் போல ஏராளமான மசாஜ் சென்டர்கள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பேசி மசாஜ் சென்டருக்கு அழைத்து, இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வைப்பதும், பின்னர் அவர்களிடம் நைசாக பேசி விபசாரம் நடைபெறுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் சீதாராம்மேட்டில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பா சென்டரில் திடீரென சோதனை நடத்தினர். அங்கு மசாஜ் சென்டர் என அழைத்து இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டியை சேர்ந்த துளசிராமன் (வயது 30), பெங்களூரு மங்கம்மனபாளையாவை சேர்ந்த ஸ்ரீநாத் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்குள்ள ஒரு ஸ்பா சென்டரில் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிந்தது. இதுதொடர்பாக ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த அர்ச்சனா (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் க

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

Image
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில்எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதி  நடைபெற்றது, பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் பங்கு கொண்ட போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்று வந்தனர். அவர்களை பாராட்டும் விதமாக சோழன் புக் ஆஃப் ரெகார்ட் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன், பள்ளி முதல்வர் ராஜ்குமார், போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஞானசிகாமணி, திமுக திருச்சி மாவட்ட தன்னார்வ துணை அமைப்பாளர் அனுசுய தாமஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். வெற்றி பெற்ற 70 வீரர்கள் வீராங்கனைகளுக்கு சோழன் புக் ஆப் ரெக்கார்டு வழங்கும் உலக சாதனையாளர்கள் விருதினை திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் வழங்கி கௌரவ படுத்தினார்.  மேலும் வீரர்கள்,வீராங்கனைகள் வெற்றி பெற உதவியாக இருந்த தமிழ்ந

உலகபுகழ்ப்பெற்ற மதுரைபாலமேடுஜல்லிகட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கி முதலமைச்சரின் முதல்பரிசு கார் வென்ற ஜல்லிகட்டு வீரர் சின்னாபட்டி தமிழ்.

Image
  தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மதுரைபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கார் முதல் பரிசு வென்ற மதுரையை சார்ந்தெ மாடுபிடி வீரர் சின்னாப்பட்டி திரு.தமிழ் அவர்களை   மறைமலைநகர் காவல்ஆய்வாளர் திரு.முத்துசுப்பிரமணியன் அவர்கள் நேரடியாக அழைத்து சால்வை மற்றும் மெடல் அணிவித்து பாராட்டினார். வீரர் திரு.தமிழ் அவர்களின் கல்விக்கு முழு உதவியும் செய்வதாக அவரது தந்தையிடம் உறுதி கூறினார். ஜல்லிக்கட்டு வீரர்கள் அனைவருக்கும்  தமிழ்நாடு காவல்துறை சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் சமூகஆர்வலர்கள் வெ.முருகன்,திரு.சுஜித்குமார்,தொழிலதிபரர் திரு.தணிகாசலம் ,பொதுமக்கள்  மற்றும் இளைஞர்கள் என பலர்  கலந்து கொண்டு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்கப்படுத்திதுணை நிற்பது தமிழர்களின் தலையாய கடமை. நிருபர்.அஜய்ஷர்மா.

கரூரில் அதிநவீனதானியங்கிகண்காணிப்பு கேமராக்கள் (ANPR) பொருத்திய கட்டுபாட்டுஅறையைதுவக்கி வைத்த DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.

Image
  கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக குற்றத் தடுப்பு பணிக்காக அதிநவீன தானியங்கி கேமராக்களை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்,DGP. அவர்களால் 01.02.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு E. சுந்தரவதனம், IPS. அவர்களால் கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் புலன் விசாரணைக்கு உத்தரவிடும் வகையில் கரூர் நகரம், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சோதனை சாவடிகள், மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள் ஆகிய இடங்களில் வாகனங்களின் பதிவு எண் மற்றும் வாகனத்தின் விபரங்களையும் தெரிவிக்கக் கூடிய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமராக்கள் (Automatic Number Plate Recognition) பொருத்தப்பட்டு கேமராக்கள் அனைத்தையும் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது மேலும் கரூர் மாவட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை 01.02.2023 அன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP. Dr. C.சைல

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

Image
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS அவர்கள்( 01.02.2023) துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார்கள்.அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து , கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை பறிமுதல் செய்தமைக்காகவும்,  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் திருமதி.வனிதா அவர்கள் நீதிமன்ற அலுவலில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு விரைவாக பணிபுரிந்தமைக்காகவும்,  செந்துறை காவல் நிலைய காவலர் திரு.செந்தில் முருகன் அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நான்கு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி புரிந்தமைக்காகவும்,  மீன்சுருட்டி

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோ பால் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாடு அணியினர் சாதனை வெற்றி வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

Image
.  தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால்  சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஏரோ கேட்டோபால் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,ம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி ஜனவரி 28, மற்றும் 29,ஆம் தேதி நடைபெற்றது இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான்,குஜராத், கேரளா, என பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து வீர்கள், வீராங்கனைகள் பங்கு கொண்டுவிளையாடிய தேசியச அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோபால் சங்கத் தலைவர் திரு.ராக்கேஷ் சுப்பிரமணியன் தலைமையில் பொதுச் செயலாளர்திரு.பிரவீன் ஜான்சன், பொருளாளர்திரு. தங்க முருகன், மேற்பார்வையில் திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், மதுரை,தர்மபுரி, என பல மாவட்டங்களில் இருந்து 17, பெண் வீராங்கனைகள், 57, ஆண் வீரர்கள் என மொத்தம் 74, ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு அணியில் விளையாடினர் 10, வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள், பிரிவு, 14,வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள், பிரிவு 14, வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள்,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்பு - சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட SP. Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையபகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. சுதாகர், திரு. அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 680 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து அவற்றை (02.02.2023) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்

திருச்சிதொழிலதிபர் வீட்டில்வைரம் ,பிளாட்டினம் தங்கநகைகள்,பணம் கொள்ளை கொள்ளையனை மடக்கி பிடித்த மாவட்டகாவல்துறையினர்

Image
.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள IAS நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். தொழிலதிபரான இவரது வீட்டில் கடந்த 23ஆம் தேதி காலை வீட்டின் பூட்டை உடைத்து 92 பவுன்நகை,வைர வளையல் மற்றும் நெக்லஸ் (மதிப்பு ரூ.5,00,000), பிளாட்டின ஆரம் (மதிப்பு ரூ.5,00,000/-), லெனோவா லேப்டாப் ஒன்று (மதிப்பு 50,000/-) சோனி லேப்டப் ஒன்று (மதிப்பு ரூ.60,000) 4 ஸ்மாட் போன் (மதிப்பு ரூ.50,000/-) மற்றும் 1,50,000/- மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடுபோனது. இது சம்பந்தமாக தேவேந்திரன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில்சம்பவ இடத்திற்குசென்று திருச்சிசரக DIG. சரவணசுந்தர்,IPS திருச்சிமாவட்ட SP. சுஜித் குமார்IPS சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் IG.G. கார்த்திகேயன் IPS உத்தரவின் பேரில் திருச்சி சரகDIG சரவணசுந்தர் IPS மேற்பார்வையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் IPS முன்னிலையில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி இன்ஸ்