கரூரில் அதிநவீனதானியங்கிகண்காணிப்பு கேமராக்கள் (ANPR) பொருத்திய கட்டுபாட்டுஅறையைதுவக்கி வைத்த DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.

 

கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக குற்றத் தடுப்பு பணிக்காக அதிநவீன தானியங்கி கேமராக்களை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்,DGP. அவர்களால் 01.02.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு E. சுந்தரவதனம், IPS. அவர்களால் கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் புலன் விசாரணைக்கு உத்தரவிடும் வகையில் கரூர் நகரம், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சோதனை சாவடிகள், மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள் ஆகிய இடங்களில் வாகனங்களின் பதிவு எண் மற்றும் வாகனத்தின் விபரங்களையும் தெரிவிக்கக் கூடிய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமராக்கள் (Automatic Number Plate Recognition) பொருத்தப்பட்டு கேமராக்கள் அனைத்தையும் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது

மேலும் கரூர் மாவட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை 01.02.2023 அன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP. Dr. C.சைலேந்திரபாபு, IPS அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் IG.G. கார்த்திகேயன்,IPS காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் திருச்சி, DIG.A.சரவணசுந்தர்,IPS. காவல்துறை துணைத் தலைவர் திருச்சி சரகம், Dr. T. பிரபு சங்கர்,IAS மாவட்ட ஆட்சித் தலைவர் கரூர் மாவட்டம் மற்றும் SP.E. சுந்தரவதனம்,IPS கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை இயக்குனர் அவர்கள் கரூரில் அதிநவீனதானியங்கிகண்காணிப்பு கேமராக்கள் (ANPR) பொருத்திய கட்டுபாட்டுஅறையைதுவக்கி வைத்த DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS. காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுடன்  கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நிருபர்.ஜெயபிரகாஷ்


Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.