காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை

 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் தலைமையில் வங்கி மேலாளர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் வங்கி ஏ.டி.எம் பாதுகாப்புக் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

 இக்கூட்டத்தில் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் பாதுகாப்பு காவலர்களை நியமித்தல், பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள் நிறுவுதல், கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஏ.டி.எம் இயத்திரத்தை உடைக்கும் பட்சத்தில் வங்கியில் மட்டும் அலாரம் ஒலி எழுப்புவது மட்டுமில்லாமல் அருகில்  உள்ள காவல்நிலையத்திலும் அலாரம் ஒலி எழுப்ப வழிவகை செய்தல், காவல்துறையினரின் தொடர்பு எண்ணை தெரிந்துவைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 150 க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.வினோத் சாந்தாராம், திரு.சந்திரசேகர், திரு.பாலகுமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜூலியஸ் சீசர் மற்றும் திரு. சுனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 சிறப்பு நிருபர்.ம.சசி

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.