ஈமுகோழி மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்று தந்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் காவல்குழுவினருக்குDGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.பாராட்டு.


ஈரோடு பெருந்துறை, குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகைதிரும்ப கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பல முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது.

இது சம்பந்தமாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 2012 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவையில் 306 முதலீட்டாளர்களிடம் ரூ.5,65,83,840/- மற்றும் ஈரோட்டில் 829 முதலீட்டாளர்களிடம் ரூ.26,58,32,570/- ஏமாற்றப்பட்டதற்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவழக்குகளிலும் 18.02.2023 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேற்படி தீர்ப்பில் இரண்டு வழக்குகளிலும் எதிரிகள் மயில்சாமி மற்றும் சக்திவேல் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கோயம்புத்தூர் வழக்கில் ரூ.5,68,48,000/- அபராதமும், ஈரோடு வழக்கில் ரூ.28,72,32,000/- அபராதமும் வழங்கப்பட்டது. அபராதத் தொகைகளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது.

இவ்வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பை மீட்டுத் தந்த காவல் கண்காணிப்பாளர் திரு. பாலாஜி சரவணன் உள்ளிட்ட காவல் அலுவலர்களை DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்DGP. Dr.C. சைலேந்திரா பாபு, IPS அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இணைஆசிரியர்.மதனகோபாலன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.