திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. காலை இரண்டு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 3 மணிக்கு யானைமீது கொடிப் பட்டம் வைக்கப்பட்டு மேளதாளத்துடன் ஊர் சுற்றி பின்னர் கோவில் வந்துசேர்ந்தது. கோவில் உள் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடிமரத்தில் சிவாச்சார்யார்கள் கொடி ஏற்றிவைத்தனர். 



பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பைப் புல் மற்றும் வண்ண மலர்கள் பட்டு பரிவட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்திரி சுதந்திர பிராமணர்கள் பஞ்சாங்கம், அத்யானம், கட்டியம், வேதபாராயணம் முழங்க மேளதாளம் பஞ்சவாத்தியங்கள் முழங்க த16 வகையான சோடஷ தீபாராதனை நடைபெற்றது பக்தர்கள் திரளாககலந்துக் கொண்டுபக்திபரவசத்துடன் வழிபாடுசெய்தனர்

 திருவிழா 12 நாள்கள் நடைபெறும் ஒவ்வொரு நாள் காலை, இரவு சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகின்றனர்.

நிருபர்.அய்யப்பன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.