தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோ பால் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாடு அணியினர் சாதனை வெற்றி வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

.

 தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால்  சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஏரோ கேட்டோபால் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,ம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி ஜனவரி 28, மற்றும் 29,ஆம் தேதி நடைபெற்றது இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான்,குஜராத், கேரளா, என பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து வீர்கள், வீராங்கனைகள் பங்கு கொண்டுவிளையாடிய தேசியச அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோபால் சங்கத் தலைவர் திரு.ராக்கேஷ் சுப்பிரமணியன் தலைமையில் பொதுச் செயலாளர்திரு.பிரவீன் ஜான்சன், பொருளாளர்திரு. தங்க முருகன், மேற்பார்வையில் திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், மதுரை,தர்மபுரி, என பல மாவட்டங்களில் இருந்து 17, பெண் வீராங்கனைகள், 57, ஆண் வீரர்கள் என மொத்தம் 74, ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு அணியில் விளையாடினர் 10, வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள், பிரிவு, 14,வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள், பிரிவு 14, வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள், பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடுஏரோஸ்கேட்டோபால் அணியினர் முதலிடம் பிடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல மாநிலங்கள் பங்கு பெற்ற இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு அணியினர் வென்று சாதனை படைத்துள்ளனர் வெற்றிக்கு பெரிதும் துணை நின்ற பயிற்சியாளர்கள் திரு. அபுதாஹிர்,திரு. அருள் பிரகாஷ் , திரு.அமல் ஜோயல், திரு.வினோத் மற்றும் பொறுப்பாளர்கள் திருமதி. யோகா, திருமதி. ஸ்வர்ணா, திரு. கார்த்திகேயன் மற்றும் வீரர்கள் வீராங்கனைகள் என அனைவரையும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சியில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்து இனிப்புகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர்.

 அப்போது தமிழ்நாடுஏரோ ஸ்கேட்டோபால் சங்கத் தலைவர் திரு. ராகேஷ் சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ஏரோ ஸ்கேட்டோபால் விளையாட்டு அங்கீகரித்து தேசிய அளவில் தமிழ்நாடு சார்பாய் 74, மாணவர்கள் பங்கு பெற செய்து விளையாடி வெற்றி பெற்று திரும்பி வர துணை புரிந்த தமிழநாடு அரசுக்கும் தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் மனமாற நன்றியை தெரிவித்தார். 

தொடர்ந்து இரண்டாம் முறை தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோ பால் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பாக சுமார் 74 வீரர்கள் வீராங்கனைகள் திறம்பட விளையாட தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்கம் நல்ல பயிற்சி அளித்து வெற்றி பெற செய்துள்ளது.

 திருச்சி மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் விளையாடி இன்னும் திறம்பட பயிற்சி பெற ஸ்கேட்டிங் தளம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்து தர வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோபால்சங்க தலைவர் திரு. ராகேஷ் சுப்ரமணியன் அவர்கள்  தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறப்புநிருபர்.S.மணிகண்டன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.