ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது



தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில்எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதி  நடைபெற்றது, பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் பங்கு கொண்ட


போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்று வந்தனர். அவர்களை பாராட்டும் விதமாக சோழன் புக் ஆஃப் ரெகார்ட் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன், பள்ளி முதல்வர் ராஜ்குமார், போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஞானசிகாமணி, திமுக திருச்சி மாவட்ட தன்னார்வ துணை அமைப்பாளர் அனுசுய தாமஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். வெற்றி பெற்ற 70 வீரர்கள் வீராங்கனைகளுக்கு சோழன் புக் ஆப் ரெக்கார்டு வழங்கும் உலக சாதனையாளர்கள் விருதினை திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் வழங்கி கௌரவ படுத்தினார். 

மேலும் வீரர்கள்,வீராங்கனைகள் வெற்றி பெற உதவியாக இருந்த தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் அவர்களை பாராட்டிசோழன் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவ படுத்தியது,

வெற்றிக்கு பெரிதும் துணை நின்ற பயிற்சியாளர்கள் அபுதாஹீர், அருள் பிரகாஷ், அமல் ஜோயல், வினோத் மற்றும் பொறுப்பாளர்கள் யோகா, ஸ்வர்ணா, கார்த்திகேயன் மற்றும் வீரர்கள், வீராங்கனைகள் என நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர்.

தலைமைநிருபர்.S.வேல்முருகன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.