அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.



தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS அவர்கள்( 01.02.2023) துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார்கள்.அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து , கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை பறிமுதல் செய்தமைக்காகவும், 

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் திருமதி.வனிதா அவர்கள் நீதிமன்ற அலுவலில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு விரைவாக பணிபுரிந்தமைக்காகவும், 

செந்துறை காவல் நிலைய காவலர் திரு.செந்தில் முருகன் அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நான்கு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி புரிந்தமைக்காகவும், 

மீன்சுருட்டி காவல் நிலைய காவலர் திரு.பிரபாகரன் அவர்கள் மீன்சுருட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தகவல் சேகரித்து சிறப்பாக செயல்பட்டமைக்காகவும், இவர்கள் பணியை பாராட்டி தமிழக காவல்துறை இயக்குனர்DGP அவர்கள் சான்றிதழ் வழங்கினார்கக்ள்.

இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மத்திய மண்டல IG. திரு.G.கார்த்திகேயன் IPS, அவர்கள் திருச்சி சரக DIG திரு.A.சரவணசுந்தர் , அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உடனிருந்தனர்.

சிறப்புநிருபர். S.மணிகண்டன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.