சிவகங்கைமாவட்டம் இணையத்தில் மோசடிசெய்த 10.லட்சம்பணத்தை மீட்டு உரியவரிடம்ஒப்படைத்த SP.S. செல்வராஜ்

 

.இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 10,00,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச. செல்வராஜ்., அவர்கள்  நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, வைகை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (32) என்பவரின் வங்கி கணக்கில் தொலைபேசி எண் மாற்றம் செய்து ரூபாய் 10,00,000/-(லட்சம்) பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்நிலையில் கோடீஸ்வரன் பணத்தை மீட்டுத்தருமாறு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ்., அவர்களிடம் மனு அளித்தார். 

மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. தேவி அவர்கள், தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக கோடீஸ்வரன் என்பவருடைய ரூபாய் 10,00,000/- பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ்., அவர்கள் பணத்தின் உரிமையாளரிடம்   மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 10,00,000/- பணத்தை  உரிமையாளரிடம் ஒப்படைத்து சிறப்பான முறையில் பணிபுரிந்ததற்காக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. செல்வராஜ்., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

நிருபர்.சிவகுருநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.