Posts

Showing posts from April, 2023

மலைவாழ் மக்களிடம்கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தியகாவல் உதவிஆய்வாளர்.M.பரமசிவம் பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS

Image
  திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் திரு.M .பரமசிவம் அவர்கள் பென்னாலூர்பேட்டை மலைவாழ் மக்களிடம் அரசுபள்ளியில் உங்கள்பிள்ளைகளுக்கு முட்டையுடன் சத்துணவுவழங்கபடுகிறது ஆகையால்பிள்ளைகள் அனைவரும் அவசியம் பள்ளிக்குச்சென்று படித்து நல்லமாணவர்களாக உருவாகவேண்டும் பெற்றோர்கள் உங்கள்பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள்விடுத்து பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS  அவர்கள் DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பணம் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.மாண்புமிகுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அவர்களும்  உதவிஆய்வாளர்.M.பரமசிவம் அவர்களைபாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. நிருபர்.AR.முருகேசன்.

இராணிப்பேட்டைபள்ளூரில் காவல்துறைசோதனைச்சாவடிமாட்ட SP.துவக்கிவைத்தார்

Image
 இராணிப்பேட்டை  மாவட்டம்  நெமிலி  காவல் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளூர்  பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடி திறப்பு  விழாவிற்கு  வருகை தந்த  இராணிப்பேட்டை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி IPS அவர்களும் அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக் IPS அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல்  சகோதரர்கள்,ஒன்றிணைந்து சிறப்பான முறையில் சோதனைச்சாவடி துவங்கப்பட்டது.    இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி IPS அவர்கள் காவலர் தனசேகரன் அவர்களுக்கு சிறப்பானகாவல்பணிக்காக  நினைவுப் பரிசுவழங்கிபாராட்டினார். chiefreorter.manohar.

திருச்சியில் ஒரு கிலோ நகை கொள்ளை 4 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைதுசெய்து நகையைமீட்டதனிபடைகாவல்குழுவினருக்கு காவல்ஆணையர்.சத்தியபிரியா IPS.பாராட்டு.

Image
  திருச்சிமாநகர் மலைகோட்டைபகுதியில் திருட்டுபோன 1.கிலோதங்கநகைகளை4. மணி நேரத்தில்  மீட்டுகுற்றவாளிகளைகைதுசெய்த தனிப்படை காவல்குழுவினருக்கு திருச்சி மாநகரகாவல்ஆணையர் M.சத்திய பிரியா IPS வெகுமதி வழங்கிபாராட்டினார். திருச்சி மலைகோட்டை பகுதி சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 43 ).இவர் கடந்த 15 வருடங்களாக தனது வீட்டிலேயே நகை பட்டறை வைத்து ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் நகை வேலை முடித்துவிட்டு வேதாத்திரி நகரில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். 24-04.2023.அன்று அதே போல் அவரும் அவரது மனைவி ஏஞ்சல் மேரி ஆகியோர் வேலை முடிந்து நகை பட்டறையில் நகைகளை செய்து முடித்த நகைகளை வைத்து விட்டு இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில்  25-04-24 காலை 6 மணி அளவில் ஜீவா என்பவர் அவருக்கு போன் செய்து வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் உடனடியாக வீட்டிற்கு வந்த ஜோசப் தனது மனைவியுடன் வந்தார். சௌந்தரபாண்டியன் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோத

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்கப்பட்டு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Image
நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் ஒரு சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அது சோழர் காலத்தைச்[ 14-15-ம் நூற்றாண்டில்] சேர்ந்த அனுமன் சிலையாகும்  ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டது. அரியலுார் மாவட்டம், பொட்டவெளி வெள்ளூர் கிராம வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருடு போயின.இது தொடர்பாக, 2012ல் செந்துறை போலீசில் புகாரான வழக்கு, 2020ல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஆஞ்சநேயர் சிலை அமெரிக்கா,

கோவை மாவட்டம்தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து 13 சவரன் நகை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்SP.பாராட்டு

Image
  கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 01.02.2023 அன்று நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது பழனியத்தாள்(75), சிவபாக்கியம்(65) மற்றும் துளசியம்மாள்(75) ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்றுள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கியின் மனைவி கெளதமி (36)என்பவர் இக் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும் விசாரணையில் மேற்படி பெண் இதுபோன்ற பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் கௌதமியை கைது செய்து அவரிடமிருந்து திருடிய 13 சவரன் நகையை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக

கடலூர்மாவட்டத்தில் காவல்நிலையங்களில் பொதுமக்கள்கொடுக்கும் புகார்மனுக்களைபதிவுசெய்துஉடன்நடவடிக்கை புதியசெயலி சிஸ்டத்தை SP.ராஜாராம் துவக்கிவைத்தார்

Image
. கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் , கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், காவல் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டPetitioner Disposal Monitoring System என்ற புதிய செயலியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. ராஜாராம் அவர்கள் துவக்கி வைத்தார். காவல்துறை உயர் அதிகாரிகள் புதிய செயல்களை அவ்வப்போது கண்காணித்து காவல் நிலையங்களில் புகார் மனு சம்பந்தமாக  விவரம் தெரிந்து கொள்ள முடியும்.  மாவட்ட காவல் அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு காவல் ஆளிநர்கள் புதிய செயலியை தொடர்ந்து கண்காணித்து முதல் தகவல் அறிக்கை ( FIR ) மனு இரசீது ( CSR  )பதிவு செய்த விவரம் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி (Hospital Intimation ) சட்டபடியான உரிய நடவடிக்கைகள்,  விசாரணை அதிகாரிகள்மனுதாரர்களிடம் நடந்துகொள்ளும்  விதம் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இப்புதிய செயலி மூலம் காவல் நிலையத்தில் கொடுக்கும் மனுக்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா காவல்துறையின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Image
  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் என்றாலேதிருச்சி மாவட்டம் முழுவதுமே விழாக்கோலத்தில் காணப்படும்.உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா  நடைபெறும். பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பு கொண்டவை. இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 9 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் பகலில் மூலவர் மற்றும் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், மண்டகப்படிகள், இரவு வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெற்றது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  ஏப்ரல் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் மிதுன லக்கினத்தில் தேர்வடம் பிடிக்கப்பட்டது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன. அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வெகுவாக கலந்து கலந்துகொண்டு சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தரிசனம் செய்தனர். இதனால்  வழக்கத்திற்கும் அதிகமான பக்தர்களின் கூட்டம் கடல் அலைகள் போல் காட்சியளித்தது, காவல்துறையினர் மிகவும் எச்சரிக்கையுடன் முன்னெச்ச

கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தை பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு இடிப்பு பல வியாபாரிகள் கைது.

Image
தூத்துக்குடிமாவட்டம்கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி சந்தை  கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி 17-04-237காலை 7 மணியளவில்கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, நகராட்சி கமிஷனர் ராஜாராம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்கெட் வியாபாரிகளில் ஒரு தரப்பினரை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர்.  கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கடை கட்டிடங்களை இடித்து விட்டு ரூபாய் 6 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய சந்தை கட்டுமான பணி நிறைவடையும் வரை தற்காலிக சந்தையானது ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் எனவும் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு நிறைவேற்றி தரப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்

கோவைமாவட்டகாவல்துறையில் முதலமைச்சர் பதக்கம்பெற்ற கவலர்களை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS .

Image
கோவைமாவட்டம் 20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்து தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற காவலர்களுக்கு நற்சான்றிதழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது 26.01.2023 குடியரசு தின அணிவகுப்பின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்டத்தை சேர்ந்த 38 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேற்படி 38 காவலர்களுக்கு தமிழக அரசின் நற்பணி சான்றிதழ்  (12.04.2023) கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், IPS அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவலர்களையும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவி்த்தார். நிருபர்.P.நடராஜ்.

காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற மூன்று பேர் கைது.

Image
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்த மூன்று பேரை செங்கம் வனத்துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். செங்கம் மற்றும் அதனை சுற்றி 40க்கும் மேற்பட்ட தரை காடுகள் உள்ளது இதில் மான், காட்டு பன்றி, காட்டெருமை, ஓநாய், முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கு சிலர் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருகின்றனர்.  கட்டமடுவு ஊராட்சி குட்டை பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக செங்கம் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குட்டை பகுதியை சேர்ந்த கரிகாலன், ஐய்யப்பன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கொள்ளத்தூர் பகுதியை சேர்ந்த பாபு என்கிற ஏழுமலை ஆகிய மூன்றுபேரை கைது செய்த செங்கம் வனத்துறையினர் மூவரிடம் இருந்த ஐந்து கிலோ காட்டு பன்றி இறைச்சி மற்றும் வேட்டையாட பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் வேட்டையாடபட்டு வருவதை தடுக்க வனத்துறையினர் இ

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் ஊராட்சிஒன்றிய அரசுமருத்துவமனையில் சித்தமருத்துவமையம் அமைச்சர் மா.சுப்ரமணியம் துவக்கிவைத்தார்

Image
  .31.3.2023, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி ,சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் வடக்குஒன்றிய வெள்ளானூர் ஊராட்சியில் உள்ள கொள்ளுமேடு அரசு மருத்துவ மனையில் சித்தாமருத்துவ மைய்யம் துவக்கவிழாவும் மற்றும்  கொள்ளுமேடு அரசு உயா்நிலை  பள்ளியில்  இலஞ்சி மன்றம் துவக்கவிழாவும் மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் MLA, BA.ML அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.    இதில் சிறப்பு அழைப்பாளராகலந்துக்கொண்டு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை  அமைச்சா் மா.சுப்பிரமணியம் அவர்கள் சித்தாமருத்துவ மையத்தையும் மற்றும் இலஞ்சி மன்றத்தையும் துவக்கி வைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு அல்பி ஜான் வர்கீஸ் IAS அவர்கள் மற்றும் கல்வி துறை IAS அவர்கள் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் .கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி வரவேற்புரை வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.பிரபாகரன் அவர்கள் வரவேற்றார் இதில் வில்லிவாக்க வடக்கு ஒன்றிய  ஒன்றிய கழக செயலாளர் மோரை கோ தயாளன், மற்றும் உள்ளாட்சி ளபிரதிநி

போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் (SPOT FINE E,CHELLAN )திட்டத்தை ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய்ரத்தோர் IPSதுவக்கிவைத்தார்.

Image
       ஆவடி காவல் ஆணையரகம் 01.01.2022 அன்று துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் (spot fine) E- chellan திட்டத்தை (நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை), ஆவடி காவல் ஆணைர் அவர்கள்  துவக்கி வைத்துள்ளார். இந்த E-challan கருவிகள் சென்னை மாநகரில் உள்ளவாறு National Informatics Centre (NIC), New Delhi-யால் உருவாக்கப்பட்டு இணைய வழியாக செயல்படக் கூடியது மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன், வாகன பதிவிற்க்கான வாகன் (Vahan) இணையதளத்துடனும், ஓட்டுநர்களின் உண்மை தன்மை உறுதி செய்யப்படும். மேலும் இந்த புதிய உரிமம் மென்பொருள் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மீதும் வழக்குகள் பதியலாம்.  இந்த மென்பொருள் மூலம் வழக்குகள் பதியப்பட்டு அவ்வழக்குகள் அபராதம் செலுத்தபடாமல் நிலுவையில் இருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் Fitness Certificate (FC), உரிமையாளர் பெயர் மாற்றம் (Ownership Transfer), Hypothecation Cancellation ,போன்ற எந்த சேவைகளையும் பெற இயலாது, மே

சென்னை, ஆவடி மாநகர திருமுல்லைவாயில் பகுதியில் ஒரே வீட்டை பலருக்கு விற்பனை செய்த வில்லங்க வெங்கடேசன் கோமதி தம்பதியர் அதிரடி கைது.

Image
  சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் த/பெ ஐயப்பன் என்பவர் கடந்த 15.05.2022 அன்று  ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவில்  எண் 6  - ல் உள்ள  சாய் இல்லம் வீட்டை புகார்தாரர்  வினோத்  சொந்தமாக  வாங்க வேண்டி எதிரி வெங்கடேசன் என்பவரிடம் 32 லட்சம் பணத்தை முன்பணமாக கொடுத்ததாகவும் எதிரி பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை கிரையம் செய்து கொடுக்காமலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி  நம்பிக்கை மோசடி செய்துவிட்டு வேறொரு நபருக்கு வீட்டை கிரயம் செய்து கொடுத்து விட்டதாகவும் தான் பணத்தை  கேட்டபோது மிரட்டுவதாகவும்  தக்க நடவடிக்கை எடுத்து  பணத்தை      மீட்டுத்தருமாறு  புகார் அளித்தார்.  புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் உடன் உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட திருமுல்லைவாயில் T 10   காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு ஆணையிட்டார் மேற்படி  புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர்,  வெங்கடேசன் கோமதி  தம்பதியரிடம்  விசாரணைகளை மேற்க்கொண்டார். மேற்க்கண்ட விசாரணைகளில் பல திடடுக்கிடும்   தகவல்கள் தெரியவந்தது.  மேற்படி  தம்பதியர்  இது போன்று பல

மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்த DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS.

Image
  தமிழ்நாடு அரசு, மீனவ சமுதாய மககளின் வாழ்வாதாரம் மேம்பட மீனவ இளைஞர்களுக்கு அரசு பணிகளில் சேர்வதற்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கி வருகிறது. ஏற்கனவே 120 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட நிலையில்  இரண்டாவது அணிக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா  (29.03.2023) சென்னை மெரினா கடற்காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர்.                                        DGP.Dr.C. சைலேந்திரபாபு,IPS. அவர்கள் தலைமை தாங்கி மீனவ இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார். REPORTER.K.BABU.