கடலூர்மாவட்டத்தில் காவல்நிலையங்களில் பொதுமக்கள்கொடுக்கும் புகார்மனுக்களைபதிவுசெய்துஉடன்நடவடிக்கை புதியசெயலி சிஸ்டத்தை SP.ராஜாராம் துவக்கிவைத்தார்


. கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் , கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், காவல் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டPetitioner Disposal Monitoring System என்ற புதிய செயலியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. ராஜாராம் அவர்கள் துவக்கி வைத்தார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் புதிய செயல்களை அவ்வப்போது கண்காணித்து காவல் நிலையங்களில் புகார் மனு சம்பந்தமாக  விவரம் தெரிந்து கொள்ள முடியும்.

 மாவட்ட காவல் அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு காவல் ஆளிநர்கள் புதிய செயலியை தொடர்ந்து கண்காணித்து முதல் தகவல் அறிக்கை ( FIR ) மனு இரசீது ( CSR  )பதிவு செய்த விவரம் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி (Hospital Intimation ) சட்டபடியான உரிய நடவடிக்கைகள்,  விசாரணை அதிகாரிகள்மனுதாரர்களிடம் நடந்துகொள்ளும்  விதம் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இப்புதிய செயலி மூலம் காவல் நிலையத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி, குறித்த காலத்திற்குள் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.