வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்கப்பட்டு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.


நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் மேலும் ஒரு சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அது சோழர் காலத்தைச்[ 14-15-ம் நூற்றாண்டில்] சேர்ந்த அனுமன் சிலையாகும்

 ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டது.

அரியலுார் மாவட்டம், பொட்டவெளி வெள்ளூர் கிராம வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருடு போயின.இது தொடர்பாக, 2012ல் செந்துறை போலீசில் புகாரான வழக்கு, 2020ல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஆஞ்சநேயர் சிலை அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்தது.அங்கிருந்து, ஆஸ்திரேலியர் ஒருவருக்கு விற்பனை செய்ததும், அவர் ஆஸ்திரேலியாவுக்கு சிலையை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

திருடு போன ஆஞ்சநேயர் சிலை போட்டோவையும், கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்த சிலை போட்டோவையும், தொல்லியல் துறை நிபுணர்கள் உதவியோடு ஒப்பிட்டு பார்த்து, அவை ஒன்றே என, உறுதியானது.

ஆஞ்சநேயர் சிலையை மீட்டுத் தர, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பினர்.இதையடுத்து, அந்த சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க துாதரகம் மூலம் மீட்கப்பட்டு, இந்திய துாதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ADSP பாலமுருகன் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர் திரு.சிபின் ராஜ் மூன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் மேலும்  முதல் நிலைக் காவலர் திரு.பாஸ்கர் முதல் நிலைக் காவலர் திரு.பாண்டியராஜன் முதல்நிலைக் காவலர் திரு.லெவின் முதல் நிலை காவலர் திரு.சுந்தர் காவலர் திரு.பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், 

17ம் தேதி டில்லி சென்று, இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து சிலையை பெற்று, சென்னை கொண்டு வந்தனர்.மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை, ஏப்ரல் 24ஆம் தேதி கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.விசாரணைக்கு பின், நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், ஆஞ்சநேயர் சிலையை பாதுகாப்பாக வைக்க, நீதிபதி சிவசக்தி கண்ணன் உத்தரவிட்டார்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.