திருச்சியில் ஒரு கிலோ நகை கொள்ளை 4 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைதுசெய்து நகையைமீட்டதனிபடைகாவல்குழுவினருக்கு காவல்ஆணையர்.சத்தியபிரியா IPS.பாராட்டு.

 

திருச்சிமாநகர் மலைகோட்டைபகுதியில் திருட்டுபோன 1.கிலோதங்கநகைகளை4. மணி நேரத்தில்  மீட்டுகுற்றவாளிகளைகைதுசெய்த தனிப்படை காவல்குழுவினருக்கு திருச்சி மாநகரகாவல்ஆணையர் M.சத்திய பிரியா IPS வெகுமதி வழங்கிபாராட்டினார்.

திருச்சி மலைகோட்டை பகுதி சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 43 ).இவர் கடந்த 15 வருடங்களாக தனது வீட்டிலேயே நகை பட்டறை வைத்து ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் நகை வேலை முடித்துவிட்டு வேதாத்திரி நகரில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். 24-04.2023.அன்று அதே போல் அவரும் அவரது மனைவி ஏஞ்சல் மேரி ஆகியோர் வேலை முடிந்து நகை பட்டறையில் நகைகளை செய்து முடித்த நகைகளை வைத்து விட்டு இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில்  25-04-24 காலை 6 மணி அளவில் ஜீவா என்பவர் அவருக்கு போன் செய்து வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் உடனடியாக வீட்டிற்கு வந்த ஜோசப் தனது மனைவியுடன் வந்தார். சௌந்தரபாண்டியன் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் ஆர்டரின் பெயரில் மூக்குத்தி செய்வதற்காக தங்கத்தை கம்பியாக உருக்கி வைத்திருந்த தங்கம், கல் வைத்த மூக்குத்திகள், கல் வைக்காத மூக்குத்திகள், மூக்குத்திகளின் திருகாணிகள், நகை செய்யும்போது சேதாரமாகும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தோடு ஆகிய நகைகள் சுமார் ஒரு கிலோ திருட்டுப் போய் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் இருக்கும். 

உடனடியாக இது பற்றி ஜோசப் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார்  விசாரணை நடத்தி வந்தார்கள். இதற்காக திருச்சி மாநகர  காவல்ஆணையர் M.சத்திய பிரியா IPS அவர்கள் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். இந்த நிலையில் கோட்டை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி கருவாட்டுபேட்டை பரணி குமார் (22)மற்றும் சரவணன் (வயது 22 )செங்குளம் காலனி முருகன் கோவில் தெரு பாலக்கரை ஆகிய இருவரும் சேர்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது . அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கருவாட்டு பேட்டையில் உள்ள பரணிகுமார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த திருட்டு நகைகளும் உடனடியாக மீட்கப்பட்டது. குற்ற சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததோடு திருட்டு நகையை மீட்ட ஸ்ரீரங்கம் காவல்சரக காவல் உதவி ஆணையர்செல்வி. நிவேதா லட்சுமி மற்றும் கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.சுலோச்சனா மற்றும்  தனிப்படைகாழல்குழுவினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா IPS அவர்கள்  வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வெகுமதி வழங்கினார்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.